பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

343


மணிமிடற்றந்தனன், மணிமிடற்று எண்கையான் எனச் சங்க இலக்கியங்கள் பரவிப் போற்றுகின்றன. சங்ககாலத்தில் நன்னன்சேய் நன்னன் என்னும் குறுநில மன்னனது ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பில் அமைந்திருந்ததும் இக்காலத்தில் வடவார்க்காடு மாவட்டத்தில் திரிசூலகிரியென்னும் பெயருடன் விளங்குவதும் ஆகிய பெரும்புகழ் வாய்ந்த நவிரமலையின் உச்சியிலே காரியுண்டிக் கடவுளாகிய சிவபெருமானுக்குச் சிறப்புடைத்தாகிய திருக்கோயில் அமைக்கப்பெற்றிருந்ததென்பது,

$6గ

பேரிசை நவிரம்மேளயுறையும் காரியுண்டிக் கடவுள தியற்கையும்” (மலைபடு 81-82)

எனப் பெருங்குன்றுார்ப் பெருங்கெளசிகனார் என்னும் புலவர் பெருமான் அத்திருக்கோயிலைச் சிறந்தெடுத்துக் கூறுதலால் இனிது விளங்கும்.

நவிரமலையிற் கோயில் கொண்டருளிய சிவபெருமான் அவனருளாலன்றி உயிர்களது அறிவால் உணர்ந்து பரவுதற்கு அரிய முறைமையினையுடைய முழுமுதற்கடவுள் என்பதனை அறிவுறுத்தும் நிலையிற் 'பராவரு மரபிற் கடவுள்’ (மலைபடு. 280) என்றார். சிந்தைக்கும் மொழிக்கும் எட்டாத நிலையில் மக்களால் உணர்ந்து பரவுதற்கு அரிய முறைமையினையுடைய கடவுள் என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும்.

யாழின் நரம்போசையுடன் இயைந்து பாடுதற்குரிய இனிய குரலினையுடைய விறலியர்கள் தொன்றுதொட்டு ஒழுகும் முறைமையாகிய தம் இயல்பில் வழுவாமல் (பிறர் யாவராலும்) பொறுத்தற்கு இயலாத பேராற்றல் வாய்ந்த முழுமுதற் கடவுளை முதற்கண் வாழ்த்தின. பின்னரே தாம் இசையரங்கிற் பாடுதற்குரிய புதிய இசைப் பாடல்களைப் பாடுதல் மரபு. இம்மரபு,

"கடவ தறிந்த இன்குரல் விறலியர்

தொன்றொழுகு மரபின் தம்மியல் வழாஅது அருந்திறம் கடவுட் பழிச்சிய பின்றை