பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 221 (யாவையும்) அழித்து முற்படும் வானம் - (ஆதிய இப் பஞ்ச பூதங்களிலே) தங்கி வாழ்கின்ற வஞ்சிக்கொடி போன்றவள், ஆடல் புரியவல்ல விடையின் மேல் வரும் சிவபிரானுடைய பாகத்தில் விளங்குகின்ற மங்கை, காளி, நடனி, நாள் தோறும் அன்பர்கள் வந்து தொழுகின்ற மாது; சக்ரவாளகிரியால் சூழப்பட்ட பூவுலகம் முழுமையும் (காத்து) ஆளும், ஒப்பற்ற, குளிர்ந்த, துழாய் மாலை தங்கும் (மார்பனும்), சோதி மணியாகிய கவுத்துவமணி அணிந்த மார்பனும் ஆகிய திருமாலின் பின்னாள்(தங்கை), இனிய சொல்லே வழங்கும் உமை மாது - (அத்தகைய தேவியின்) மைந்தனே! எந்தையே! இளையோனே - குற்றமற்ற அடியார்கள் வாழ்கின்ற ஊர்களுக்குப் போய் (அவர்கள் இருக்கும் இடத்தைத்) தேடி, (அவர்களுடன்) விளையாடி அங்கேயே நின்று, வாழ்கின்ற மயில்வீரனே! திருச்செந்துாரில் வாழ்கின்ற பெருமாளே! (வேறு தானின்றி வாழ்கின்ற தொருநாளே) 94 வஞ்சக எண்ணங் கொண்டவனாய், வலிமை வாய்ந்த ராவணன், பந்துபோல (வேகமாகச் செல்லும்) வலிய குதிரை, தேர், யானை, மேக ஒழுங்குக்குச் சரியான அனேகம் சேனை இவைகளுடன் - வந்து, அம்பின் (கூட்டங்கள்) நிறைந்து எழ, எதிர்த்துத் தனது சாமர்த்தியப் பெருமைப் பேச்சும், வீண்பேச்சும், இழிவான பேச்சும் பல பேசி, எதிரில் உள்ள சேனை (யுடன்) - மிகவும், நாள்முழுதும், சண்டை செய்தபோது, (எதிரில் உள்ள) குரங்குச் (சேனைகள்) நிலைபெற்ற நெருப்புப் போலக் கோபங்கொண்டு, மலைகளையும், கரடு முரடான மரங்களையும் (பிடுங்கி) வீசி -