பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/760

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . வள்ளிமலை திருப்புகழ் உரை 287 மனைவியும் (அல்லது வீடும்), இளைஞர்களும் (தனக்கு வயதிற் சிறியவர்களும்) மெதுவாக வேறாக (நிற்கும்படி), வலிய எருமை (மீது வரும்) மாயம் வல்ல யமனாரும் (என்னை) இகழ்ந்து என்னுடைய உயிரைக் கொள்ளை யடித்துக் கொண்டு போகும் (அந்த தினத்தில் (நான்) உய்யுமாறு ஒப்பற்றவனாகிய நீ உனது அழகிய கழலை (எனக்குத்) தந்தருளுக. பழைய வேதங்கள் தேடி நின்று காணுதற்கு இல்லை என்று முறையிடுகின்ற நாதராம் சிவபிரான் (உன்னிடம் கற்றுச்) சொல்லும் உபதேசத்தைச் செய்த குரு நாதனே! துள்ளி விளையாடுகின்ற புள்ளி மானும் நானும்படி (வெட்கும்படி) எள்ளினவளாகிய இகழ்ந்தவளாகிய) வள்ளி (வாழ்ந்திருந்த) (வள்ளிமலைக்) காட்டில் நின்று தங்கினவனே! வல் - அசுரர் (வலிமை வாய்ந்த அசுரர்கள்) மாளவும் (இறக்கவும்), நல்ல சுரர் (தேவர்கள்) வாழவும், விரைவில் கூரிய வேலாயுதத்தைச் செலுத்தினவனே! வள்ளிக் கொடி படர்ந்திருந்த சாரல் கொண்ட (மலைப் பக்கங் கொண்ட) வள்ளிமலையில் வீற்றிருக்கும் வள்ளி மணவாளப் பெருமாளே! (உய்ய ஒரு நீ பொற் கழல் தாராய்) 314 கோழையும், 1. சேரும் நோய்களும், மோகங்களும், ஆசைகளை (எழுப்பும்) ஐம் பொறிகளும், அவைகளின் சூழ்ச்சிகளும், பல (கலை) நூல்களும் (ஆகிய இந்தச்) சேற்றினைத் தாண்டாது துள்ளி அவைகளுக்கு உள்ளேயே விழுந்து இறந்து போகின்ற உள்ளமும், மனை வாழ்க்கையையே எண்ணுகின்ற ஆசையும்