உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350

பன்னிரு திருமுறை வரலாறு


எனவரும் பழைய பாடல் திருவிசைப்பாத் திருப்பதிக வகையினைக் குறிப்பிடுதல் காணலாம். இப்பாடலின்கண் ஒன்பதாந்திருமுறையிலுள்ள பாடல்கள் 365 எனத் தொகை கூறப்படினும் இப்பொழுதுள்ளவை 301 பாடல் களேயாம். எஞ்சிய அறுபத்துநான்கு பாடல்களும் ஏடுகளிற் சிதைந்திருத்தல் வேண்டும். அல்லது இப் பாடலிற்குறித்த முந்நூற்றறுபதினுேடைந்தே ' என்ற தொகை ஏடெழுதுவோராற் சிறிது மாறுபட்டிருத்தல் வேண்டும். பூந்துருத்தி நம்பிகாடநம்பி பாடிய திருவாரூர்த் திருவிசைப்பாப் பதிகத்தில் இப்பொழுது இரண்டு பாடல்களே காணப்படுகின்றன. இதனை நோக்குங்கால் இத்திருமுறையிற் சில பாடல்கள் சிதைந்து மறைந்து போயின என்பது விளங்கும்.

திருமாளிகைத் தேவர் பாடிய இணங்கிலாவீசன்' என்ற பதிகம் காந்தாரத்திலும், கருவூர்த்தேவர் பாடிய கணம் விரி', 'கலைகள் தம் பொருளும் எனவரும் இரண்டு பதிகங்களும் புறநீர்மையிலும், நீரோங்கி வளர்கமலம்' என்பது காந்தாரத்திலும், நம்பிகாடநம்பி பாடிய முத்து வயிரமணி’ என்பது சாளரபாணியிலும், வேணுட்டடிகள் பாடிய துச்சான என்ற முதற் குறிப்புடைய பதிகம் புற நீர்மையிலும், திருவாலியமுதனர் பாடிய பவளமால் வரை' என்பது நட்டராகத்திலும், அல்லாய்ப்பகலாய்' என்பது இந்தளத்திலும் ஏனைய இருபத்தொருபதிகங்களும் பஞ்சமப்பண்ணிலும் இசையமைக்கப் பெற்றுள்ளன. இவ்விசையமைதி,

ஐந்துடளுல் வருமுரைத்த திருக்கடைக் காப்பிற்பண்

அறையின் மாளிகைத் தேவர் நான்கிலொன்று காந்தாரம், முந்து கருவூரர் பத்தின் இரண்டு புற நீர்மை

மொழிந்திடு காந்தாரமொன்று, காடவர்கோனிரண்டின், நந்தலில் சாளரபாணியொன்று, வேளுட்டடிகள்

நவின்றதொன்று புற நீர்மை, திருவாலியமுதர் பந்தமறச் சொன்னன் கி ைென்று நட்டராகம்

பகர்ந்திடினென்றிந்தளம், மற்றெவையும் பஞ்சமமே. என்ற பழைய பாடலிற் குறிக்கப் பெற்றமை காண்க. எனவே திருவிசைப்பாவிலமைந்த பண்கள் காந்தாரம், புற நீர்மை, சாளரபாணி, நட்டராகம், இந்தளம், பஞ்சமம் என்ற ஆறுபண்களேயென்பதும் இவற்றுள் சாளரபாணி யொழிந்த ஐந்தும் தேவாரத்திருப்பதிகங்களிற் பயின்ற