முகவுரை பஞ்சாயத்தை நடத்துவது எப்படி ?, என்னும் புத்தகத்தை ஆரம்ப முயற்சியாக 1952-ல் வெளியிட்டேன். அப்போது, ஸ்தல ஸ்தாபனங்களின் பிரதிநிதியாக மேல் சபையில் வீற்றிருந்த நீ டி. புருஷோத்தம் அவர்கள் சிறப் புரை வழங்கி வெகுவாகப் பாராட்டினர்கள். மற்றும், அரசாங்கம், அமைச்சர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், பொது மக்கள் ஆகியோர்களிடமிருந்தும் நல்ல வரவேற்புக் கிடைத்தது. அத்துடன், சம்பந்தப்பட்ட இதர விஷயங் களேயும் வெளியிடும்படி பலர் உற்சாகப்படுத்தினர்கள். அதனல், மேலும் பல புத்தகங்களே வெளியிட முடிந்தது. இப்பொழுது, பஞ்சாயத்துத் தொடர்புடைய எல்லா விஷயங்களேயும் தொகுத்து ஒருங்கே இணேத்து, பெரிய அளவில் இந்தப் புத்தகம் வெளியிடப்படுகிறது. அநேகமாக, எல்லாத் தகவல்களுமே இதில் அடங்கியுள்ளன என்று கூறலாம். நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், இனி ஈடுபட விருப்பம் உடைய பொதுமக்களுக்கும் கூட இந்தப் புத்தகம் உபயோகமாக இருக்கும் என்று கருதுகிறேன். தவிர, ஏதேனும் குறைகள் கண்டு எடுத்துச் சொன்னலும் அல்லது ஆலோசனைகள் கூறிலுைம் தக்கவாறு திருத்திக் கொள்ளச் சித்தமாயிருக்கிறேன். இதனேப் படிப்பவர்கள், சுலபமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு, நடைமுறையில்பழக்கத்தில் உள்ள சொற்களே இந்தப் புத்தகம் முழுவதிலும் உபயோகித்திருக்கின்றேன். ஏனெனில், இம்மாதிரி நுட்ப விஷயங்களில் மொழிப்பற்று, பிறமொழித் துவேஷம், உணர்ச்சி போன்றவற்றிற்கு இடம் அளித்து, விஷயத்தைப் புரிந்துகொள்ள முடியாதபடி குழப்பம் உண்டாக்க நான் விரும்பாததே காரணம். சம்பந்தப்பட்ட பெரும்பான்மை யோருக்கு விஷயமே முக்கியம்’ என்று கருதுகிறேன்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/8
Appearance