உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

15



கட்டில் நிணப்பவன் கை ஊசி

‘ஆர்புனைத் தெரியல் நெடுந்தகை செய்யும் போர் இழிசினன் கை ஊசி போன்றது” என்கிறார்.

ஊரிலே திருவிழா. மனைவிக்குக் குழந்தைப் பேறு; மழை வேறு பெய்கிறது. இந்தச் சூழ்நிலையில் அவன் கட்டில் பின்னுகிறான். அந்தக் கீழ் மகன் கையில் உள்ள பின்னும் ஊசிபோல விறுவிறுப்பும், சுறுசுறுப்பும், வேகமும் அவன் செய்யும் போரில் உள்ளன என்கிறார்.

இந்தக் கட்டில் பின்னுபவனை எப்பொழுதோ கண்டிருக்கிறார். அவன் செய்கையோடு உவமிப்பது அரிய உவமையாக உள்ளது.

சாறுதலைக் கொண்டெனப் பெண்ணிற் றுற்றெனப், பட்டமாரி ஞான்ற ஞாயிற்றுக், கட்டில் நிணக்கும் இழிசினன் கையது போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ, ஊர்கொள வந்த பொருநனொடு ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே!” 1 – 6/82

தச்சன் செய்யும் தேர்க் கால்

ஒரு நாளில் எட்டுத் தேர்கள் செய்யக்கூடிய தச்சன் ஒரு மாதம் எடுத்துக் கொள்கிறான். ஒரு சக்கரம் செய்ய ஒரு மாதம் ஆகின்றது. அதன் வலிமைக்கு நெடுமான் அஞ்சியின் வலிமை உவமிக்கப்படுகிறது.

‘ களம்புகல் ஒம்புமின்தெவ்வின் போர் எதிர்ந்து,

எம்முளும் உளன் ஒரு பொருநன், வைகல் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால்அன் னோனே’ - 87

களிறு அதன் இருவேறு இயல்புகள்

நெடுமான் அஞ்சி பாடுவார்க்கு எளியன்; சாட வருவார்க்கு அரியன் என்ற கருத்தை அழகிய உவமையால் கூறுகின்றார்.

களிறு கயம் படிகிறது; அதனைக் கழுவும் சிறுவர்பால் அது இனிதாக நடந்து கொள்கிறது,