பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 எஸ். நவராஜ் செல்லையா

21 Lodi Goril–Li # (Emil Zatopek) si görı 15 trgih, அழகாக ஒடத் தெரியாத அந்த வீரன், ஆர்வத்துடன் பந்தயங்களைப் பார்க்க வந்த அத்தனை பார்வையாளர்களையும் கவர்ந்து கொண்டான். மூன்று தங்கப் பதக்கங்களை வென்று, மூன்று ஒலிம்பிக் சாதனைகளே உருவாக்கி, மாபெரும் வெற்றி வீரகை திகழ்ந்தான். -

இத்தகைய ஆற்றல் அந்த வீரனுக்கு எப்படி வந்தது என்று அவன் வாழ்க்கைக் குறிப்பினை ஆராய்ந்தால், நாம் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போகிருேம். ஆமாம்! தொடக்கத்தில் இருந்தே கற்றுத்தர யாரும் இல்லாததால் தானே தனியாக ஒடப் பழகிக்கொண்டான், தானே தன்னை தயார் செய்து கொண்டான். தானே தன்னைத் தகுதியாக்கிக் கொண்டான் என்ருல் பார்த்துக் கொள்ளுங்களேன்!

‘ஒரு காரியத்தைத் தொடேன், தொட்டு விட்டால், எக் காரணத்தைக் கொண்டும் விடேன், என்று அவன் மன உறுதியுடையவகை அல்லவா விளங்கியிருக்கிருன்! தீய பழக் கங்களை மனதாலும் தொடேன், திறமைகளை வளர்க்கும் பண்புகளே கனவிலும் விடேன்' என்று திண்மை நிறைந்த நெஞ்சினய்ை திகழ்ந்தான். அவ்வாறு விடாமுயற்சியில் விடி வெள்ளியாய் விளங்கிய எமில் செட்டபக், அனுதினமும் செய்த பயிற்சிமுறையின் பட்டியலைப்பார்த்தால், இப்படியும் ஒரு வீர ைஎன்று நாம் வியக்கிருேம். விரிந்த விழிகளுடன், மூடாத வாயுடன் விழிக்கிருேம். ஆமாம்! மனித எஞ்சின் என்று பாராட்டப்பட்ட வீரனல்லவா அவன்!

தினமும் செய்கின்ற, ஒடிப் பழகுகின்ற பயிற்சி முறை இது தான்.

200 மீட்டர் தூரத்தை 5 முறை ஒடுதல்.

400 மீட்டர் துாராத்தை 60 முறை ஒடுதல்.

200 மீட்டர் தூரத்தை 5 முறை மீண்டும் ஒடுதல்.

பிறகு இதற்கிடையில் நின்று ஒய்வு எடுத்துக் கொள் ளாமல் 200 மீட்டர் தூரத்தை மெதுவாக ஒடிக் கொண்டு இருத்தல் என்பது தான் அன்ருடப்பயிற்சியாகும்.