பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

abstract automatic

34

A/B switch box


abstract automatic : தன்னியக்கக் கருத்துரு : தானியங்கு கருத்தியல்.

abstract class : கருத்தியல் இனக்குழு.

abstract data type : கருத்தியலான தரவு இனம்.

abstract machine : கருத்தியல் எந்திரம்; பொழிப்பு எந்திரம். ஒரு நுண்செயலிக்கான வடிவாக்கம். உண்மையில் பயன்படுத்து வதற்குரியது அல்ல. இது ஒரு மாதிரி வடிவம் மட்டுமே. கருத்தியல் எந்திர மொழி என அறியப்படும் ஒர் இடை நிலை மொழியின் செயலாக்கத்திற்கான ஒரு மாதிரி வடிவமைப்பு. இந்த வடிவமைப்பை ஒர் ஆணைமாற்றியோ (interpreter) மொழிமாற்றியோ (compiler) பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த துண்செயலியின் நிரல் தொகுதி உண்மையான கணினி நிரல்களோடு ஒத்திருக் காது. மொழிமாற்றம் (compile) செய்யப்பட்ட நிரல் தொகுதி யுடன் பெரிதும் ஒத்திருக்கும்.

abstract methods : கருத்தியல் வழி முறைகள்.

abstract syntax : கருத்தியல் தரவு தொடரியல் : கருத்தியல் தரவு இன வரையறை. கணினியின் வன்பொருள் கட்டமைப்பு மற்றும் குறியிட்டு முறை சாராத, ஒரு தரவுக்கட்டமைப்பின் வரையறை அல்லது இலக்கணம். இத்தகைய தரவு இன வரையறை, எல்லாவகைக் கணினிக்கும், எல்லாவகைக் கணினி மொழிகளுக்கும் பொதுவான ஒன்றாகும்.

abstract syntax notation : கருத்தியல் தரவு இனக்குறிமானம் - 1 : கருத்தியல் தரவு இனங்களுக்கும், தரவுக் கட்டமைப்பு பற்றிய வரையறைகளுக்குமான ஐஎஸ்ஓ வின் தரக் கட்டுப்பாடு. ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றுவதற்கு இத் தரக்கட்டுப்பாடு அடிப் படையாக விளங்குகிறது.

abstract syntax tree : கருத்தியல் தொடரமைப்பு மரவுரு : பல்வேறு, ஒருங்கிணைந்த கட்டளைத் தொடர் சூழல்களிலும் கட்டமைப்பு சார்பான உரைத் தொகுப்பான்களிலும் பயன் படுத்தப்படுகின்ற மர உரு.

A/B switch box : ஏ/பிமாற்று விசைப் பெட்டி : இரு நிலை விசை அமைப்பை தன்னகத்தே கொண்ட ஒரு பெட்டி இந்தப் பெட்டி வழியாகச் செல்லும் சைகை (சமிக்கை) யை இரு வகையாக நெறிப்படுத்தலாம். (1) ஒற்றை உள்ளிட்டிலிருந்து,

இரு வெளியீடுகளில் ஏதேனும் ஒன்றுக்கு. (2) தேர்ந்தெடுக்கப்