உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

acronym

45

active cell


கோப்பாக மாற்றித் தரும். பிடிஎஃப் கோப்பினை வெவ்வேறு பணித்தளங்களில் பார்வையிட முடியும். மூலக்கோப்பு எந்தப் பயன்பாட்டுத் தொகுப்பில் உருவாக்கப்பட்டிருந்தாலும், அக்கோப்பிலுள்ள வேறு வேறான எழுத்துருக்கள், நிறங்கள், வரைகலை மற்றும் ஒளிப்படங்களையும் சேர்த்து, கணினி வழியாக பிறருக்கு அனுப்பி வைக்க முடியும். பிடிஎஃப் கோப்புகளைப் பார்வையிட மட்டும் முடிகின்ற 'அக்ரோபேட் ரீடர்' என்னும் மென்பொருள் இலவசமாகவே கிடைக்கிறது.


acronym : முதலெழுத்துக் குறும் பெயர் தலைப் பெழுத்துச் சுருக்கப் பெயர்.


across worksheets : பணித்தாள்களுக்கிடையே.

action : செயல் : குறிப்பிட்ட சூழலில் வெளியாகும் செயற்பாடு.


action argument : செயல்மதிப்புரு செயல் இணைப்பு மாறி.


action diagram : செயல் வரிபடம்

action message : செயல் தகவல்; செயல் செய்தி.

action oriented management : செயல் சார்ந்த மேலாண்மை.

action oriented management report : " செயல் சார்ந்த மேலாண்மை அறிக்கை சிறப்புக் கவனம் தேவைப்படுகின்ற அசாதாரண சூழ்நிலைகள் குறித்து நிர்வாகத்தினை விழிப்படையச் செய்யும் ஒரு சிறப்புக் குறிப்புரை.

action statement : செயல் கூற்று : சில செயல்களை மேற்கொள்ளும்படி கணினிக்குத் தரப்படும் கட்டளை.

action stub : செயலிடம்

activation : இயங்குவித்தல் : ஒரு செயல்முறையை இயங்கச் செய்தல்.

activation record ; இயங்குவிப்பு ஏடு : இயங்க வைத்தல் தொடர் பான தரவு வைக் கொண்டப் உள்ளமைப்பு தரவு அமைப்புமுறை.

activation stack : இயங்குவிப்பு இருப்பு நிகழ்வு இயக்கி உட்பட அனைத்து இயக்கிகளுக்குமான ஒரு உட்பகுதி தகவல் அமைப்பு.

active addressing : இயங்கு முகவரி; செயற்படு முகவரி.

active area : இயங்கு பரப்பு

active cell : செயற்படும் சிற்றிடம்; இயங்கு கலன் : மின்னணுவியல் விரிதாளில், தளப்பரப்பில் சுட்டியினால் உணர்த்தப்படும் கட்டம்.