பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள் I 9

னிடம் எறியும் தட்டு (Disc)ஒன்று செய்து தா என்று கேட்ட தற்கு, அவனும் கற்பனை செய்து கொண்டு ஒரு இரும்புத் தட்டை செய்து கொடுத்தான். அந்த இரும்புத் தட்டின் எடை 20 பவுண்டாகும்.

ஆசையுடன் பெற்றுக்கொண்ட அந்த இரும்புத்தட்டை சிரமப்பட்டுத் துாக்கியெறிந்து, எந்த முறையும் தெரியாமல் பழகிக்கொண்டிருந்தான் ராபர்ட். ஏதென்ஸ் நகரில், ஒலிம் பிக் பந்தயத்தில் இரும்புக்குண்டு எறியும் பே ா ட் டி யி ல் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் அடைந்தபிறகும் கூட, ராபர்ட்டுக்குத் தட்டெறியும் போட்டியிலும் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை நீங்கவே இல்லை.

ஒலிம்பிக் பந்தயத்தில் தட்டெறியும் போட்டியே மிகவும் கவர்ச்சிகரமான ஒன்ருகும். கிரேக்கர்கள் த ட் .ெ ட றி யு ம் வீரனேயே சிறந்த வீரகை மதிப்பார்கள். தட்டெறியும் போட்டியில் கிரேக்கர்களே வெற்றி பெறுவார்கள், அவர் களால்தான் முடியும், அவர்களை வெல்ல ய ா ரா லு ம் முடியாது' என்ற நினைப்பு உண்டு. கர்வமும் திமிரும் இருந் ,'D s'b] .

எல்லா போட்டிகளிலும் அமெரிக்கர்களே வெற்றி பெற். றிருந்தனர். அதாவது 12 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தனர். தட்டெறியும் போட்டி நடைபெற இருந்தபோது, கிரேக்க நாட்டு வீரன் பானகியாடிஸ் பாரஸ் வோ போலஸ் என்பவனே வெற்றி பெறுவான் என்று கிரேக்க நாடே நம்பியிருந்தது.

அவன் மைதானத்திற்குள் நுழைந்தவுடன் மைதானமே வரவேற்பது போல பெரும் சத்தம் பீறிட்டுக் கிளம்பியது. அந்த ஆரவார வரவேற்பில், அவன் எறிந்த தூரம் 94 அடி 3 அங்குலம். இனிமேல், இதற்குமேல் யாராலும் எறிய முடியாது என்று அகங்கார இறுமாப்பில், பானகியாடிஸ் புறப்பட்டு விட்டான்.