உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

acoustic coupler ACIS


கொள்வது தொடர்பான விதிமுறைகளையும் இக்கொள்கை வரையறை செய்கிறது. 2. விண்டோஸ் என்டி (விண்டோஸ் 2000) மற்றும் விண்டோஸ் எக்ஸ் பீ இயக்க பிணையத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட கணினி அல்லது ஒரு களப்பிரிவில் (domain) உள்ள பயனாளர்கள் நுழைசொற்களைப் (passwords) பயன்படுத்துவதற்கான விதிமுறைகளை இச்சொற்றொடர் குறிக்கிறது.

acoustic coupler : கேட்பொலி பிணைப்பி.

accumulation : திரட்சி ; சேர்ப்பு.

accumulator : குவிப்பி; திரளகம்; திரட்டகம்; சேர்ப்பகம் : நுண்செயலில் கணக்கீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பதிவகம். பொதுவாக, குறிப்பிட்ட உறுப்புகளை எண்ணுவதற்கோ, தொடர் கூட்டுத்தொகையை பதிவு செய்யவோ இப்பதிவகம் பயன்படுகிறது.

accuracy : துல்லியம்

accurate : துல்லியமான.

ACD : ஏசிடி : Automatic Call Distributor என்பதன் சுருக்கம். வரிசைமுறை அமைப்பில் பயன்படுவது.

ACF : ஏசிஎஃப் : Advanced Communication Facility என்பதன் சுருக்கம்.

ACH : ஏசிஎச் : Association for Computers and the Humanities என்பதன் குறும்பெயர். மொழி, இலக்கியம், வரலாறு, மானிடவியல், சமூகவியல் இவற்றில் கணினி ஆய்வுகளையும் மற்றும் கலை, இசை, நடனம் ஆகியவற்றைப் படைக்கவும் கற்கவும் பயன்படுத்துபவரை ஊக்குவிக்கும் பன்னாட்டுச்சங்கம்.

ACI : ஏசிஐ : Automatic Car identification என்பதன் குறும்பெயர். தானியங்கு முறையில் தொடர்வண்டி பெட்டிகளை அறிதலைக் குறிக்கும். இரயில் பாதை நிறுவனங்கள் தொடர்வண்டி பெட்டிகளை அறிவதற்குப்பயன்படுத்தும் தானியங்கு முறை.

ACIA : ஏசிஐஏ : Asynchronous Communications interface Adapter என்பதன் குறும்பெயர். செய்தித் தகவல் தொடர்பு இடைமுகங்களில் பயன்படுத்தப்படும் ஒரு ஒருங்கிணைந்த மின்சுற்றுச்சிப்பு.

ACIS : அசிஸ் : Andy. Charles. lan's System என்ற சொற்றொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இது பொருள்