பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை பிங்கலம் சீரா = சிறிய கூரிய உடைவாள். 'சூர் தூளாய் வீழச் சிறுதாரைச் சீராவாலே வாளாலே வேலாலே சேதித்திடும் வீரா" - திருப்புகழ் 1045 "நிசாசரக் குலத்தை- சீராவினா லறத்தறுத் தொதுக்கிய பெருமாளே." - திருப்புகழ் 1132 (750, 1139ம் பார்க்க) ஞஅரையிற் கட்டுஞ் گویی *ராவும்" என்பர் பின்னும்: (81) சீரா என்பதற்குக் கவசம் என்றும் பொருள்; "சீராம ராம" என்னுங் கந்தரந்தாதிச் செய்யுளைக் (80) காண்க செச்சை = வெட்சி. யமதுாதர் ஒலையுடன் வருவது. "வருபவர்கள் ஒலைகொண்டு நமனுடைய துாதரென்று மடிபிடியதாக நின்று தொட்ர்போது" - திருப்புகழ் 430 வாகை - வெற்றி - ஆகுபெயராக வெற்றியே பிறங்கும் வேல் எனப் பொருள் காண்க ‘கையில் - மாலை - "ஒரு கை தாரொடு பொலிய ஒரு கை மார்பின் மாலை தாழ்ந்ததனோடே சேர்ந்து அழகு பெற" - திருமுருகா-உரை. 'பூந்தொடையல் சேர அணிந்த திருக்கரமும் . கந்தர் கலிவெண்பா 50 இந்தப் பாடல் காலையில் எழுந்திருக்கும்போதும் இரவிற் படுக்கும்போதும் சொல்லி முருகனைத் தியானிப்பதற்கு கப் பொருத்தமான பாடல். 28. தன் ஆனந்தங் கூறினது வேலே விளங்குகை யான் செய்ய தாளினில் வீழ்ந்திறைஞ்சி மாலே கொளவிங்ங்ன் காண்பதல் லான்மண வாக்குச்செய லாலே யடைதற் கரிதா யருவுரு வாகியொன்று போலே யிருக்கும் பொருளையெவ் வாறு புகல்வதுவே. (பொ. உ. வேலாயுதம் விளங்கும் திருக் கரத்தை உடைய முருகவேளின் சிவந்த திருவடிகளில் விழுந்து வணங்கிப் போற்றி (மாலே கொள) ஆசை கொள்ள (இங்ங்ன்) இவ்வாறு (காண்பது அல்லால்) காணலாமே ஒழிய, மன்ம், வாக்கு செயல் - ஆகிய இவைகளால் அடைவதற்கு (அரிதாய்) முடியாததாய், (அருவுருவிாகி) உருவின்மை, உரு உடைமை (ஆகி) ஆன் இரண்டு நில்ையையும் உடையதாய், (ஒன்று போல ஏக மூர்த்தியாய் விளங்கும் (பொருளை) கடவுளை எவ்வாறு புகல்வது விளங்குவது (விளக்க முடியாது என்றபடி) * , (சு உ) முருகன் திருவடியில் வீழ்ந்து ஆசையுடன் வணங்கிப் போற்றி அவனைக் காணல்ாமே ஒழிய வேறு மனம், வாக்கு செயல் என்பனவற்றால் அப் பரம்பொருளை அடைய முடியாது; இத்தன்மையன் என்று சொல்லவும் முடியாது. (கு உ) "செவ்வா னுருவில்" எனத் துவங்குங் கந்தரநூபூதியின் (30) குறிப்புரையும், "அவனருளே கண்ணாகக் காணி னல்லால்,