பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/794

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - கழுக்குன்றம் திருப்புகழ் உரை 321 கடல் (வேலாயுதத்தின் சூட்டினால்) வற்றி வறண்டு சுறில் எனச் சுருங்க, மாயை மயக்கங்கள் செய்த (கிரவுஞ்ச மலை இடிந்து தடால் தடால் என்று விழ மேலான) சனங்கள் (தேவர் - முநிவர், முதலானோர்) ஐயா, ஐயா என்று உனை வாழ்த்திப் புகழ் இசைப் பாடல்களைப் பாட வேலாயுதத்தை எடுத்து நடந்த (ஞான) சூரியனே! அசல வேடுவப்பெண் (வள்ளிமலை வேடப்பெண்) (அல்லது சுனையிடத்தே தனது (சலத்தை) கோபத்தைக் காட்டிய வேடப்பெண்) வள்ளியை மணந்த புய மலைகளை உடையவனே! தமிழ் (முழங்கும்) வேதகிரியில் (திருக்கழுக் குன்றத்தில்) வீற்றிருந்தருளும் கிருபாகர மூர்த்தியே! சிவ குமரனாம் வேளே! (ஆறெழுத்தை நினைந்து குகா குகா என வகை வராதோ) 327 வேதகிரியாகிய (திருக்கழுக்குன்றத்திலும்) (வள்ளிமலைத்) தினைப்புனத்திலும் (அல்லது வேதமலையாம் வள்ளிமலையில் தினைப்புனத்தில்) விரும்பி வீற்றிருக்கும் அழகனே! வேடுவச்சி (வள்ளியின்) பாத தாமரையின்மேல் வெட்சி மாலை அணிந்த உனது திருமுடி படும்படி அன்பு வைத்து (காதலித்து) (ஆட்கொள்ள வேண்டிய) சமயம் இது என்றறிந்து (அவளிருக்கும் தினைப் புனத்தே) புகுந்த பன்னிரண்டு திருப்புயங்களை உடைய நண்பனே! அன்புடனே நான் உன்னை அன்பு வழிபாடு செய்வதற்கு உரிய புத்தியை (உபதேச மொழியை)ச் சொல்லியருளுக. பகைத்து வந்த வீரபத்ரரின் துணைவியான காளி (அல்லது வீரமுள்ள பத்ரகாளி) நானும்படி தமது 'மகுடம் (கிரீடம்) (ஆகாசத்தை) மகுடா மாகாச முட்ட மகுடம் ஆகாசம் முட்ட