பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 373 துன்பமும் முடக்குவாதம் முதலிய (உடலை அழிக்கும் நோய்களும் சிரங்குடனே, சியும், புழுவும், ஜலமும் ஒழுகும் புண்கள், குடவன்) குடவுண்ணியால் ஏற்பட்ட (கடி) விஷக்கடியுடன் (இளமைவயதில் வந்த ஜன்னிநோய், சூலைநோய், இவையெலாம் பெருகவே, (பறந்து) உயிர் பறந்துபோய் உடல் அழிவுற்று, யமனுடைய ஊரிலே புகும் துன்பக்கடலை நான் கடக்கும்படி (விடும்படி) உன்னுடைய சீரான திருவடியைப் பெறவல்ல வித்தையை - மந்திரத்தைத் தந்தருளுக; ஆகாயத்தில் ஒலிக்கும் துந்துமி (பேரிகை) வாத்திய்த்துட்ன் கணநாதர்கள் புகழ வேத மந்திரம் வல்ல்வர்கள், இந்திரர், சந்திரர், சூரியன், கவிவாணர்கள், தவசிகள், வியாக்ரபாதர், பதஞ்சலி (அல்லது தவஞ்சிறந்த வியாக்ரபாதர், ஒப்பற்ற பதஞ்சலி) பிரமன், அழகிய ': அவருடன் இல்க்குமி, சரஸ்வதிதேவி, அவளுடன் அரிய தவமுநிவர்களின் பத்தினிமார்கள். விண்ணில் உள்ள ரம்பையாதி தேவமாதர்களுடன் விளங்கும் சிறப்புடைய நாகலோக மாதர்களும் அழகிய மண்ணுலக மாதர்களும், இவர்களுடன் அருந்ததி ஆதிய மாதர்களும் புகழ, நடனம் புரிந்த தாமரை யொத்த செவ்விய திருவடிகளை உட்ையவருடைய 'பக்கத்திலும் உள்ளத்திலும் உள்ள சிவகாம சவுந்த்ரியாம் பார்வதிதேவி பெற்றருளிய கந்தவேளே! திந்திமி திந்திமி தோதி மிந்திமி....தானத னந்தனனா என்று ஒலிக்கும் பறைகளும், செவ்விய தவிலும் (மேள்வகையும்), சங்குடனே முழங்க, அசுரர்களின் தலைகள் பொடியாகப்போகும் செயலைச் செய்த வேலாயுதனே! (372ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி)

  • மாடு (பக்கத்தில்) சிவகாம சவுந்தரி" என்பது அயலே புரிவோ டுமைபாட ஆடும்" (சம்பந்தர் 3-101-2) என்னும் கருத்தது. செம்பதத்தர் அகம் சிவகாமி - என்றது. உடையாள் உன்றன் நடு இருக்கும்" (திருவாசகம் கோயில் மூத்த-1) என்னும் கருத்தது.