பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/671

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மறமா வயிலேகொடு வுடலே யிருகூறெழ மதமா மிகு”சூரனை மடிவாக வதையே செயுமர்வலி யுடையா யழகாகிய மயிலா புரிமேவிய பெருமாளே.(8) 700. கதி பெற தனதன தனதன. தாந்த தாணன தனதன தனதன. தாந்த தாணன தனதன தனதன. தாந்த தாணன தனதான நிரைதரு மணியணி யார்ந்த பூரித ம்ருகமத களபகில் சாந்து சேரிய இளமுலை யுரமிசை தோய்ந்து மாமல ரனைமீதே, நெகிழ்தர அரைதுகில் வீழ்ந்து மாமதி முகம்வெயர் வெழவிழி பாய்ந்து வார்குழை யொடுபொர இருகர மேந்து நீள்வளை யொலிகூர. விரைமலர் செறிகுழல் சாய்ந்து நூபுர மிசைதர இலவிதழ் மோந்து வாயமு தியல்பொடு பருகிய வாஞ்சை யேதக வியனாடும். வினையனை யிருவினை யீண்டு மாழ்கட லிடர்படு சுழியிடை தாழ்ந்து போமதி யிருகதி பெறஅருள் சேர்ந்து வாழ்ஆ. ருநாளே: பரையபி நவைசி.வை சாம்ப வீயுமை

  1. யகிலமு மருளரு ளேய்ந்த கோமளி பயிரவி திரிபுரை யாய்ந்த நூல்மறை சதகோடி

"சூரனை வதையே செயு மாவலி யுடையாய்" - இது சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி' என வரும் திருமுருகாற்றுப்படையின் கருத்தது. iசுழி தீக்குணம்: "சுழியுடைத் தாயுடைக் கொடிய சூழ்ச்சியால் . "கம்பராமாயணம். பள்ளி. 74 4. பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே . அபிராமி அந்தாதி 13