பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சேரநாட்டின் செங்கோல் வேந்தனாயினன். இவன் இளவரசனாயிருந்தபோதே தன் தந்தை தமையன் முதலியோர் மேற்கொண்ட போர்களில் இவன் பங்கு கொண்டு வெற்றி பெற்றிருக்கிறான். மேலும் நெடுஞ் சேரலாதன் கடற்குறும்பு செய்த பகைவரை வெல்வதற்கு இளவரசனான செங்குட்டுவனையே அனுப்பினான் என்று தெரிகிறது. பகைவரின் காவல் மரமான கடம்பமரத்தை வெட்டி அதனால் முரசு செய்து தன் நாட்டிற்கு வெற்றி யுடன் திரும்பிய செய்தி பல பாடல்களால் 83 தெரிய வருகின்றது. பதிற்றுப்பத்தில் பரணர் செங்குட்டுவன் மேல் பாடிய ஐந்தாம் பத்தும், அதற்குப் பழையவுரைகாரர் எழுதிய குறிப்புரையும் இதற்குச் சான்று பகருகின்றன. அவை வருமாறு: s = e s m = a + = h = n = * * * * * * * * * * * தானை மன்னர் இனியா ருளரோ நின்முன்னும் இல்லை மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது விலங்குவளி கடவும் துளங்கிருங் கமஞ்சூல் வயங்குமணி யிமைப்பின் வேல்இடுபு முழங்குதிரைப் பனிக்கடல் மறுத்திசினோரே. இப்பாடலில் செங்குட்டுவனின் கடற்போர்ச் செய்தி குறிப்பிடப் பெறுகின்றது.

கடல் மறுத்திசி னோராகிய தானை மன்னர் இனியாருளரோ, நின் முன்னும் இல்லையெனக் கூட்டி வினைமுடிவு செய்க. கடல் மறுத்தல் என்றது கடலிற் புக்கு ஒரு வினை செய்தற்கு அரிதென்பதனை மறுத்தலை.'

செங்குட்டுவன் காலத்திலும் அவனுடைய தந்தை நெடுஞ்சேரலாதன் காலத்திலும் இருந்த பரனரே, _ _ 63. அகம், 127, 35:347:3.6. பதிற்றுப்பத்து: 2:1; 2-16; 2:2-3; 7:4-7; 10:2-5. இலம்பு; 28: 135.136. -