பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க நின்
வலிமை!



நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏன் ஒலிம்பிக் பந்தயம் நடந்து வருகிறது என்ற கேள்விக்கு, கிரேக்க நாட்டில் உலவி வரும் கதை ஒன்றைப் பதிலாகக் கூறுவார்கள்.

ஒலிம்பிக் பந்தயம் தொடங்கிய காலத்துக் கதை இது. புனிதமான ஓட்டப் பந்தயங்களில் அல்லது மல்யுத்தப் போட்டி ஒன்றில் வெற்றி பெற்ற பெண் ஒருத்தி, அந்நாட்டின் ராணியாகிவிடுவது மரபாக இருந்து வந்தது.

ஒரு முறை ராணியாகிவிட்டால், இறக்கும் வரை அவளே ராணியாக இருப்பாள் என்பதும் சம்பிரதாயம். ஆண்களுக்கான ஓட்டப் பந்தயங்களில் வெற்றி பெறுகிற வீரனையே, அந்த ராணி மணந்து கொண்டு, மன்னனாக்கி விடுவாள்.

49 அல்லது 50 முழு நிலாக் காலம் முடிவடைந்த பிறகு, மீண்டும் ஒரு விளையாட்டுப் பந்தயம் நடக்கும். அதில், கிரேக்க நாட்டு வீரர்கள் அனைவரும் கலந்து