பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 115

கின்றது. மணவாள மாமுனிகள் இதை அறிவிக் கின்றார்.

திருப்பாவை வியாக்யானங்கள் (பக். 245-248) கண்ணன் கொடிய காளைகளை அடக்கி, கட்பின் னைக்கு மாலை சூட்டினான் என்னும் செய்தியைச் செப்புகின்றன.

வடமொழி பாகவதத்திலும் இச்செய்தி வருகின்றது. திருப்பாவை வியாக்கியானத்தில் கண்ணனுடைய வளர்ப்புத் தாயாகிய இடைக்குல மட க்தை யசோதை யின் தமையன் கும்பகன் என்பது தெரிய வருகிறது; அவனுடைய தொழுவத்தில் ஏழு முரட்டுக் காளைகள் இருந்தன; அவை பசுக்களுக்கும், மக்களுக்கும் பெருங் துன்பம் செய்து வந்தன. கும்பகன், அக்காளைகளை அடக்குவோருக்குத் தன் மகள் கப்பின்னையைத் திருமணம் செய்து கொடுப்பதாக அறிவித்தான். ஏற்கெனவே,மாமன்மகளாம் கப்பின்னையைக் காதலித் தவன் கண்ணன். ஆகவே அவளை யடையும் அவாவினால் அக்கொடிய காளைகளை அடக்கி கப்பின்னைக்கு மாலை சூட்டினான் என்று கூறு

கின்றது.

வடமொழி பாகவதம் (ஆறாம் நூற்றாண்டுப் பாகவதம்) இச் செய்தியை வேறு வகையாகக் கூறுகிறது. அது, கோசல காட்டு அரசனான நக்கின சித்து என்பவனுக்குச் சத்தியவதி’ எனும் அழகிய மகள் இருந்தாள். அரசன் தன்னுடைய மந்தையில் உள்ள ஏழு காளைகளை அடக்கிப் பிடித்துக் கட்டு பவனுக்குத் தன்னுடைய மகளைத் திருமணம் செய்து கொடுப்பதாக அறிவித்தான். இதனையறிந்த கண்ண