பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/859

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை ஏராரு மாட கூட மதுரையில் மீதேறி "மாறி யாடு மிறையவர் tஏழேழு பேர்கள் கூற வருபொரு ளதிகாரம். ஈடாய ஆமர் போல வணிகரி லூாடாடி யால வாயில் விதிசெய்த லீலாவி சார தீர வரதர குருநாதா: 'மாறியாடும் இறையவர். இது கால் மாறியாடின திருவிளையாடற் சரித்திரத்தைக் குறிக்கின்றது. ராசசேகரன் என்னும் பாண்டியனுடைய சபைக்குச் சோழ நாட்டிலிருந்து வந்த ஒரு புலவன் எங்கள் அரசன் கரிகாற் பெருவளத்தானுக்கு ஆடல் நூல் வரும், தங்களுக்கு வராது' என்று சுட்டிக்காட்ட பாண்டியன் நாண முற்றுத் தானும் அக்கலையைப் பயிலத் தொடங்கினான். அக்கலை உடலுக்கு மெத்த அயர்வு தருவதைக் கண்டு "அந்தோ! வெள்ளி யம்பலத்தில் திருக்கூத்தாடும் இறைவன் எப்போதும் இடது திருவடியைத் துாக்கிக் கூத்தாடிக் கொண்டே இருக்கின்றாரே! அது அவருக்கு எவ்வளவு அயர்ச்சி தரும்" என எண்ணி, கூத்தப்பிரானது முன்னிலையில் நின்று பெருமானே! தூக்கிய இடது திருவடியை நில மீது ஊன்றி உனது வலது திருவடியை எடுத்து வீசி ஆட வேண்டும்; அடியேன் பொருட்டு இங்ங்ணம் கால் மாறி யாட வேண்டும். இன்றேல், அடியேன் உயிரை விடுவேன்" என உளம் நெகிழ்ந்து உரைக்கக் கூத்தப்பிரான் அவனது வேண்டுகோளுக்கு இரங்கி அங்ங்னமே கால் மாறி யாடினர். t ஏழேழு பேர்கள் - சங்கப் புலவர்கள் நாற்பத்தொன்பதின்மர். ஏழேழு பேர்கள் கூற வரு பொருளதிகாரம் "ஊமர் விதிசெய்தது. அகப் பொருள் இலக்கணம் இல்லையே என்று பாண்டியன் வருந்தச், சொக்கலிங்க மூர்த்தியே 60 சூத்திரங்கள் கொண்ட நூலை எழுதி அளித்தார். இந் நூல் இறையனார் அகப்பொருள்' எனப் பெயர் பெறும். இந்நூலுக்கு நாற்பத்தொன்பது சங்கப் புலவர்களும் உரை கண்டு, தத்தம் உரையே சிறந்ததென வாதாடினர். ஆலவாய் அண்ணலே! நீ தான் எங்கள் கலகத்தைத் தீர்க்க வேண்டும்" என்று இறைவன் முன் முறையிட்டனர். இறைவன் ஒரு புலவர் போல வந்து இவ்வூரில் வணிகன், உப்பூர் கிழாரின் மகன், ஊமை, பாலன், சரவண குகனே வந்துள்ளான், அவன் ஒப்பிலா ஞானி, அவன் பெயர் உருத்திர சன்மன்; அவன் முன் உங்கள் உரையைச் (அடுத்த பக்கம் பார்க்க)