பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/662

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமயிலை திருப்புகழ் உரை 103 உயர்ச்சியுற்ற கொங்கை மலைகளைக் கொண்ட குறமகள்) வள்ளி இனிமைபெற (அந்த வள்ளிக்கு) சிலத நலமுறு - தோழன் (அல்லது ஏவல் செய்வோன்) (போன்று) நன்மைகொண்ட சிலபல பேச்சுக்களாய அமுதத்தை (அமுத மொழிகளை) வீசிப் பரப்பி (அவளுடன்) பேசப்பயின்ற அறுமுக வேளே! நிறைந்து விளங்கும் அருள்கொண்ட நீ് சீரண (சீரண - சீர் - அண் - அ) பெருமை செறிந்த (சேர்ந்த) (புரணம்) நிறைவே! (விதரண) தயாள குணத்தனே! (விசிரவண) நிரம்பிய கேள்வி யுடையவனே! சரணு (சரண் + உ) அடைக்கலம் புகுதற்கு உரிய (உ) இறைவனே! சரவணமடுவில் தோன்றியவனே! குகனே! (சயன்) - சயந்தன் - சிவனுடைய ஒளி (திரவ) பாய்ந்தவனே! ஒளி சாரமே! பரனே! அதிக (சிரம்) மேன்மை உடையவனே வேதத்தின் (மறைகளின்) முடிந்த பொருளான நீதியனே! (அகர) அகரம் போல்பவனே முதற்பொருளே! உகர தி சிவசக்தியாய் விளங்கும் நல்லறிவே! (மகர தி) ஆணவ மதத்தை (தி) தகிப்பவனே! (சிகர தி) சிவமாகிய அறிவே! (யகர) . ஜீவான்மாவில் விளங்குபவனே! (அருளதி) - அதிக அருளே! (தெருளதி) - அதிக (தெருளே) ஞானமே! வலவல மிக்க வலிமை வாய்ந்த (அரணம்) காவற் கோட்டைகளிலிருந்த முரணுறு அசுரர்கள் - (மாறு) பகைமை பூண்ட அசுரர்களும் அழியும்படி வேலாயுதத்தைச் செலுத்தினவனே! அழகும், விளங்கும் புலமையும் (கல்வி ஞானமும்) பெருமையும், வளப்பமும் நிலைத்திருக்கும் மயிலாப்பூரில் நாள்தோறும் வீற்றிருந்தருளும் "ஹர ஹர" ஒலிக்கு உரிய சிவனுடைய குமாரனே! அடியவர்தம் பெருமாளே! (கிருபையின் மலிகுவதொருநாளே) 696. தமக்கு ஒப் பில்லா தனவான இரண்டு கயல் மீன்களென்று சொல்லும்படி புரண்டு, இரண்டு செவிகளின் - (அல்லது குழைகளின்) மேலே நெருங்கிப் போர் செய்து