பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/691

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கோடை நகர் (இது வல்லைக்கோட்டை என வழங்கும். திருவள்ளுர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு 11-மைல் துரத்திலுள்ள ஆரீபெரும்பூதுாருக்குத் தெற்கு 6 மைல் வண்டலூர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு மேற்கு 12-மைல். சிங்கபெருமாள் கோயில் ரெயில்வே ஸ்டேஷனுக்கு வடமேற்கு 10 மைல். வாலாஜாபாத் ரெயில்வே ஸ்டேஷனுக்குக் கிழக்கு 12-மைல் , ஸ்வாமி பெயர் "கோடையாண்டவர்"இரண்டுதேவிமார்களுடனும் வீற்றிருக்கின்றார். 707. அன்பு பெற தானதன தான தந்த தானதன தான தந்த தானதன தான தந்த தனதான ஆதிமுத னாளி லென்றன் தாயுடலி லேயி ருந்து ஆகமல மாகி நின்று புவிமீதில். ஆசையுட னேயி றந்து நேசமுட னேவ ளர்ந்து ஆளழக னாகி நின்று விளையாடிப்; பூதல மெலாம லைந்து மாதருட னேக லந்து பூமிதனில் வேனு மென்று பொருள்தேடிப். போகமதி லேயு ழன்று பாழ்நர கெய் தாம லுன்றன் பூவடிகள் சேர அன்பு தருவாயே: சிதைகொடு போகு மந்த ராவணனை மாள வென்ற தீரனரி நார ணன்றன் மருகோனே. தேவர்முநி வோர்கள் கொண்டல் மாலரிபிர் மாவு நின்று தேடஅரி தான வன்றன் *முருகோனே, கோதைமலை வாழுகின்ற நாதரிட பாக நின்ற கோமளிய நாதி தந்த குமரேசா.

  • முருகன்-குழந்தை என்னும் பொருளில் வந்துள்ளது.

- பாடல் 679, 693 பார்க்க