பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரூர்) திருப்புகழ் உரை 767 கலைக்குள் (ஆடையுள்-அல்லது அவர்கள் சம்பந்தமான கொக்கோக சாத்திர்த்துள்) படு - அகப்பட்டு, (அல்லது கலைக்கு உட்படு கலைக்கு உட்பட்டு) பேதமாகி - மனம் வேறுபட்டு, நான் இறந்து படுவது உனக்குப் பிரியந்தானோ! கருணாகர்ன்ே! இந்த என் தலை விதியைத் தாண்டிக் கடக்கக் கூடியதும், பெரும்ை பொருந்தியதுமான ஞான நிலையை நான் என்று கூடுவேன்! (வள்ளிமலைத்தினைப் புனத்தில் காவல் செய்து வந்த பெண்ணின் வள்ளியின் கொங்கைய்ர்கிய பொன் மலையில் பொருந்தின மோகத்தை (ஆசையைக்) கொண்ட ஜாதகத்தையுடையவனே! வளைவுள்ள பிறையைச் சூடும் சீடையையுடைய பெருமானுடைய நல்ல புதல்வனே! பொறுமைக்குப் பூமியைப் போலும் என்றபடி, (பொறுமையுள்ள) நீதி கொண்ட மகா தவசிகள் சிறப்புற்று வாழ, நெருங்கிய பசிய (பசுமை பொருந்திய குளிர்ந்த) சேர்லையிலுள்ள மலராலாய மாலைகளைப் புயத்திலணிந்: துள்ளவனும், பாவியுமான சூரனுடைய அரிய உயிரை வவ்விய வேலனே! கோபித்து வேகமாக அலைகளை வீசி மோதுகின்ற பெரிய கடல் (அணையிட்டு அடைத்து (பிசிதாசனாதி) பிசித அசன - ஆதி மாமிசமுண்ணும் அரக்கர் முதல்வனான ராவ்ணனுடைய சிறந்த தலைமுடிகள் அற்றுவிழப்பாணத்தை ஏவின வீரம் பொருந்திய் மாமனாகிய திருமாலும், அவருடைய கொப்பூழிலே உதித்து நான்மறையோதும் (நாமன்) பொமை பொருந்திய பிரமனும் நன்மதிப்பு வைத்துப் புகழ்கின்ற பராக்ரம்சாலியே! 'திருவிழாக்கள் நிறைந்து பொலியும் திருப்புக்கொளியூர் என்னுந் தலத்தில் வீற்றிருக்கும் தம்பிரானே! தேவ்ர்கள் தம்பிரானே! (ஞானம தென்று சேர்வேன்) பேரூர் 953. முடிவே இல்லாத பிணி (பிறவி நோய்) வு பெற . சீவனர்கிய் ஆத்துமாவைப் பற்றிய இந்தச் சிற்றுயிர்க்கு உற்ற ஞான நிலையைத் தருவதும்.