பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/587

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்றாண்டு 565 பாரி நிலையம், சென்னை அச்சு மதராஸ் ரிப்பன் பிரஸ், புதுக் கோட்டை முதல் பதிப்பாண்டு 1936. பதினைந்தாம் பதிப்பு 1968. இத் தொகுப்பில் உள்ள கவிதைகளாவன. சுப்பிரமணிய பாரதியாரின் விருப்பப்படி முதல்முதலாகப் பாடிய இரண்டு பாடல்கள் தொடக்கத்தில் உள்ளன. இவை பல இதழ்களில் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. பல மொழிகளிலும் பெயர்க்கப்பெற்றுள்ளன). பின்னர், காவியம், இயற்கை, காதல், தமிழ், பெண்ணுலகு, புதிய உலகம், பன் மணித்திரள் என்னும் 75 தலைப்புகளில், பாடல்கள் உள்ளன. சில உள்தலைப்புகளும் உண்டு. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் முதல் பூசணிக்காய் மகத்துவம் ஈறாகப் பல பாடல்கள் உள்ளன. மொத்தப் பக்கங்கள் 188. அழகின் சிரிப்பு வெளியீடு: செந்தமிழ் நிலையம், ராயவரம், புதுக் கோட்டை. விற்பனை உரிமை: பாரி நிலையம்; மதராஸ் ரிப்பன் பிரஸ், இராமச் சந்திரபுரம். முதல் பதிப்பாண்டு 1944, இயற்கைக் காட்சிகளின் கற்பனை வளம் நிறைந்த இந் நூலில், அழகு, கடல், தென்றல், காடு, குன்றம், ஆறு, செந் தாமரை, ஞாயிறு, வான், ஆல், புறாக்கள், கிளி, இருள், சிற் நூர், பட்டணம், தமிழ் ஆகிய பதினாறு தலைப்புகளில் 153 பாடல்கள் உள்ளன. முதல் தலைப்பில் மட்டும் மூன்று பாடல் களும் மற்ற தலைப்புகளில் பத்துப் பத்துப் பாடல்களுமாக 153 பாடல்கள் உள. - - . தமிழ் இயக்கம் வெளியீடு: செந்தமிழ் நிலையம், இராமச்சந்திரபுரம், புதுக்கோட்டை, விற்பனை உரிமை: பாரி நிலையம், சென்னை அச்சு: மதராஸ் ரிப்பன் பிரஸ், புதுக்கோட்டை, முதல் பதிப் பாண்டு 1945. நெஞ்சு பதைக்கும் நிலை முதலிய 24 தலைப்பு களில் மொத்தம் 120 பாடல்கள் உள்ளன. * * -