116
மனத்தின் தோற்றம்
நீக்கி விடவேண்டும் என்பதே. ஐ என்பதை ‘அய்’ என்னும் ஈரெழுத்துகளாலும், ஒள என்பதை ‘அவ்’ என்னும் ஈரெழுத்துகளாலும் எழுதி, ஐ, ஒள என்னும் இரண்டெழுத்துகளையும் கல்லறைக்கு அனுப்ப முயல்கின்றனர். இவை, வேறு மொழியிலிருந்து வந்ததாகச் சிலர் உளறுவர். தொல்காப்பியத்தின் சிற்சில பகுதிகளைப் பிய்த்துப் பிய்த்துக் கல்லறைக்குள் எறிகின்றனர் சிலர்.
தமிழிலிருந்து வேறு மொழிகட்குப் போன எழுத்துகளும் கலைகளும், அம்மொழிகளிலிருந்து தமிழுக்குத் திரும்ப வந்தன என்று கூறக் கூடாதா? அப்பா தந்த மிட்டாய்களுள் இரண்டை, சிறுவன் மீண்டும் அப்பாவுக்குக் கொடுத்தது போன்றதாகும் இது.
ஐ, ஒள இரண்டனுள் ஒள என்பது புதிய வரிவடிவம் கொண்டது அல்லவே! முன்பே ஒ உள்ளது. ள உள்ளது. இவற்றைப் பொறிகளில் பயன்படுத்தி ஒள எழுத்தைச் சரி கட்டலாமே. மற்றும், அய்யர் என்பதனினும் ஐயர் என்பதில் ஒரு வரிவடிவம் குறைவாயிற்றே.
ஐ, ஒள என்னும் எழுத்துகளை இந்த வரிவடிவத்தில் ஏன் படைத்துச் சேர்த்துக் கொண்டிருக்கவேண்டும்? என்பதையும் ஆராய வேண்டும். ஏதோ பயன் கருதித்தானே அந்தக் காலத்தில் முன்னோர்கள் இந்த ‘ஐ’ எழுத்தை அமைத்துள்ளனர். அந்த எழுத்தை இப்போது நீக்கி விடுவதால் சில புணர்ச்சி விதிகளில் தெளிவின்மை உண்டாகும்; இதற்காகப் புணர்ச்சி விதியில் கை வைக்க வேண்டி நேரும்.
எழுத்தைக் குறைக்கும் முயற்சியில், பண்டைக் காலத்தார் இந்தக் காலத்தார்க்கு இளைத்தவர் அல்லர், நுணா, கனா, புறா என்று இக்காலத்தார் ணா, னா, றா என இரண்டு வரி வடிவம் கொடுப்பதைக் குறைத்து , ,