உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

147



பிடிக்கு உணவு தருவதாக எண்ணிக் களிற்றின்மேல் ஊடல் கொண்டதாம். பாடல்:

“தளிர்க் குளகினைத் தேன்தோய்த்துத்
தனதுவாய் கொடுக்கும் செய்கை
பளிக்கறை அதனுள் கண்டு
பரிந்து வேறொன்றினுக்கு இங்கு
அளித்த தென்று உளம்மயங்கி
அரும்பிடி ஒருகூர்ங் கோட்டுக்
களிற்றினை முனிந்து செல்லும்
கம்பலை உடைத்து அக்குன்றம்” (19-23)

என்பது பாடல். குளகு = இலை உணவு.

5.3 பறவைகளை மிரட்டும் பொய்த் தீ

ஒரு பொய்கையில் அரக்கு ஆம்பல் எனப்படும் சிவந்த ஆம்பல் மொக்குகள் வாய் அவிழ்ந்து நிரம்ப மலர்ந்தனவாம். அதைக் கண்ட தாய்ப் பறவைகள், தண்ணீர் தீப்பற்றி எரிகிறது என்று அஞ்சி, தம் குஞ்சுகளைச் சிறகாகிய கைகளில் ஒடுக்கிக் காத்தனவாம். இக்கற்பனை முத் தொள்ளாயிரம் பாடல் ஒன்றில் உள்ளது. பாடல்.

“அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
வெள்ளம் தீப்பட்ட தெனவெரீஇப் - புள்ளினம்தம்
கைச்சிறகால் பார்ப்புஒடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேல் கோக்கோதை நாடு” (110)

என்பது பாடல். பார்ப்பு = குஞ்சு. கவ்வை = கூச்சல் ஒலி - இதிலிருந்து பிரபுலிங்க லீலைக்கு வருவோம்.

திருப்பருப்பத மலையில் உள்ள ஒளிமரத்தில் பகலில் பறவைகள் கூடுகளில் முட்டையிட்டு வெளியில் சென்று இரைதேடிப் பின் இருள் தொடங்கும் மாலையில் மரத்தை அடைந்தபோது, அம்மரம் ஒளிமயமாகத் திகழ்ந்ததால்,