சுந்தர சண்முகனார்
127
கூறிய நூல்களின் பாடல்களில் கூறப்பட்டுள்ள திரண்ட கருத்தாகும்.
இந்தப் பிரபுலிங்க லீலைப் பாடல் பகுதிக்கு வேறொரு விதமாகவும் பொருள் கூறலாம். அதாவது:-
தாழ்மையாக - அமைதியாக அடக்கமாக - பணிவாக வாழ்பவர்கள் மிகவும் உயர்ந்தவர்களாக மதிக்கப் பெறு வார்கள்; இங்கனம் இன்றி, தங்களைத் தாங்களே பெருமைப்படுத்திக் கொண்டு ஆரவாரமாகச் செருக்குடன் வாழ்பவர்கள் மிகவும் தாழ்ந்தவர்களாகக் கணிக்கப்படுவர். என்பதுதான் மற்றொரு பொருள்:
இந்தக் கருத்தை, எந்த அறம் சூழ்ந்தோர் உரைத்த நூல்கள் கூறுகின்றன? திருவள்ளுவர் திருக்குறளாகிய அறநூலில் கூறியுள்ளார்:
பெருந்தன்மை உடையவர்கள் என்றைக்கும் பணிவாக ஒழுகுவார்கள் அதாவது, பணிவாக நடப்பவர்களே பெருந் தன்மை உடையவர்களாக மதிக்கப் பெறுவர். மாறாக, கீழ்மையாளர்கள் தங்களை மேலாகப் பாராட்டி ஆரவாரப் படுத்திக்கொள்வர் - அதாவது, தங்களைத் தாங்களே பாராட்டிக் கொண்டு ஆரவாரத்துடன் வாழ்பவர்கள் கீழோராகக் கணிக்கப்படுவர்-
மற்றும், தங்களைத் தாங்களே பெருமிதப் படுத்திக் கொள்ளாதவர்கள் பெருமை உடையவர்கள் எனவும், தங்களைத் தாங்களே பெருமிதப்படுத்திக் கொண்டு திரிபவர்கள் சிறுமை உடையவர்கள் என்றும் மக்களால் எண்ணப்படுவர். குறள்கள்.
- “பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
- அணியுமாம் தன்னை வியந்து” (978)
- “பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
- பெருமிதம் ஊர்த்து விடல்” (979)