378 8. பஞ்சாயத்துச் சட்டத்தை நிறைவேற்றுவதில் மாவட்ட அபிவிருத்தி மன்றங்களின் பங்கு பற்றிய விளக்கங்கள் பஞ்சாயத்து சட்டத்தை நிறைவேற்றுவதில் 1961-ம் ஆண்டு மே மாத வரையில் செய்யவேண்டிய காரியங்கள் வருமாறு : (i) முதலில் நிறுவப்பட்ட பஞ்சாயத்து யூனியன்களேப் பலப்படுத்துவது; இதில் முதல் ஆண்டு வரவு செலவு திட்டமும் முதல் ஆண்டுக்கான சட்டங்களும் அடங்கும். (ii) இரண்டாவது தொகுதி பஞ்சாயத்து யூனியன் களேத் தொடங்குவது. (iii) மூன்று தொகுதிகளுக்கான, பஞ்சாயத்து அபி விருத்திக்கான திட்டமிட்ட வரவு செலவு திட்டத்தை தயாரித்தல். (iv) முதல் தொகுதி, பஞ்சாயத்து யூனியன்களுக் கான திட்டத்தை வகுப்பது குறித்த உத்தரவை நிறை வேற்றுதல். (w) குடும்பக் கட்டுப்பாடு பற்றிய கட்டளேயை நிறை வேற்றுதல். 2. மேற்சொன்ன வேலேகளே வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்றல் அரசாங்க அலுவலர்களும் அரசாங்கச் சார்பற்ற நபர்களும் இது விஷயமாய் அரசாங்கத்தார் வெளியிட்டுள்ள உத்தரவுகளேத் தெளிவாகவும் நன்ருக்வும் தெரிந்து கொள்வது அவசியமாகும். மேற்சொன்னவைகளே நிறைவேற்றுவதில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் பற்றி அவர்களுக்கு விரிவாக விளக்க வேண்டியது இன்றி யமையாததாகும். இப்படிச் செய்தால்தான், இதில் பங்கு கொள்ளவேண்டிய ஒவ்வொரு நபரும், இந்தத் திட்டத்தின் நோக்கத்தையும், இது குறித்து அவர் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும். 3. மேற்சொன்ன நடவடிக்கைகளே நிறைவேற்றுவதில் ஏராளமான நபர்கள்-அரசாங்க அலுவலர்களும் அரசாங்கச் சார்பற்றவர்களும்-ஈடுபட்டுள்ளனர். ஆகவே, அவர்களது கடமைகள் பற்றியும் அவர்களது பங்கு என்ன என்பது
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/864
Appearance