உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 செய்யும் பொழுது, ரெவினியூ டிவிஷனல் அதிகாரியின் சம்ம தத்தைப் பெற் வேண்டும். டெண்டர் விதிகளின் எந்த அம்சத்திற்கேனும் பொருந்தாத வகையில் செயல் புரிய நேர்ந்தால் ர்ெவினியு டிவிஷனல் அதிகாரியின் சம்மதத்தைப் பெற வேண்டும். 91. குத்தகை தாரர்களுக்கும் ஒப்பந்தக்காரர் களுக்கும் வரியை ரத்து செய்வது ஏன்? ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்குச் சேரவேண் டிய எந்த ஒரு வரி, கட்டணம், அல்லது வேறு தொகையை வசூலிக்க முடியாது என்று கவுன்சில் கருதினால் அதைத் தள்ளுபடி செய்து விடலாம். வரி, கட்டணம் அல்லது வேறு எந்தத் தொகை ஆயினும் வசூலிக்க முடியாது என்று தள்ளுபடி செய்ய வேண்டிய ஒரு தனி வகையில் ஐம்பது ரூபாய்க்கு அதிகப்படுமானல் அதற்குக் கலெக்டரின் அனுமதி யைப் பெற வேண்டும். நியாயமாக எதிர்பார்த்திருக்க முடியாத எதாவது ஒரு அசாதாரணமான காரணத்தால், ஒரு குத்தகைதாரர் அல்லது ஒப்பந்தக்காரர் தம் குத்தகை அல்லது ஒப்பந்தத்தின் பகுதியை, செயல்படுத்த முடியாமல் போகுமானல் மாத்திரம் அனுமதி கொடுக்கவேண்டும். உதாரணமாக, பெருவாரி நோய் ஏற்பட்டதன் விளைவாக, குத்தகைக்கு விடப்பட்டிருக் கிற ஒரு மார்க்கெட்டை மூடும்படியான அவசியம் ஏற்படு வது. - அப்படி அனுமதிக்கப்பட்ட வரி வஜா, அந்த அசாதாரண மான காரணத்தால், குத்தகைதாரர் அல்லது ஒப்பந்தக்காரர் தம் குத்தகை அல்லது ஒப்பந்தத்தின் பகுதிகளே நிறைவேற்ற முடியாமல் இருந்த காலத்திற்கு ஏற்ற விகிதப்படி கொடுக்கப் படவேண்டிய தொகையைவிட அதிகமாக இருக்கக் கூடாது. வஜா செய்யப்படும் தொகை ரூ. 50க்கு மேற்படும் பட்சத்தில் கலெக்டரின் முன் அனுமதியைப் பெற வேண்டியது அவசிய மாகும். 92. கிராம ரோடு வேலைகளை கவனிப்பது யார் ? பஞ்சாயத்து சட்டம் அமுலாக்கப்பட்டதன் விளைவாக நெடுஞ்சாலை இலாகா, (ஹைவேஸ் டிபார்ட்மெண்ட்) பஞ்சா யத்து நிர்வாகத்திற்கு ஏற்றதாக இருக்கும் வகையில், திருத்தி