பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை (3) கடலை வற்றச்செய்த திருவிளையாடல் சிவபிரானுடையது திருப்புகழ்905-பக்கம் 640 பார்க்க (4) பிரமன் தலை யிழந்தது - திருப்புகழ் 285 பக்கம் 209 கீழ்க்குறிப்பு (5) பிரமன் வேலாற் சிறைபெற்றது . வேலுக்கு அஞ்சுவது திருப்புகழ் 571-பக்கம் 310கீழ்க்குறிப்பு. 46. நித்தியத்துவம் பெற செருக்கும் பராக வயிராவ தத்தெய்வ யானைமணஞ் செருக்கும் பராக தனந்தோய் கடம்ப செகமதநூல் செருக்கும் பராக மநிரு பனந்தந் தெளிவியம்பு செருக்கும் பராகம் விடுங்கடை நாளுந் திடம்பெறவே. (ப உ) செரு போரினையும், கும்ப - மத்தகத்தையும், ராக கோபத்தையுமுடைய, அயிராவத - அயிராவதத்திடம் வளர்ந்த தெய்வயானை - தெய்வயானை நாயகியினது, மணம் வாசனையையும், செருக்கும் இறுமாப்பையும், பராக - மலர்த் தாதுக்களையுமுடைய, தனம் - கொங்கையில், தோய் - முழுகுகின்ற, கடம்ப கடப்ப மாலையையுடையவனே செக - உலகத்திலுள்ள மதநூல் . சமயசாஸ்திரங்களின், செருக்கும் - மயக்கத்தையும், பராகமம் - இதர வேதாகமங்களையும், நிருபன - நிருமித்த தேவனே அந்தம் - முடிவான பொருளை, தெளிவி - இஃதென்று எனக்கு விளக்கியருள வேண்டும். அம்புசெர் -தாமரையில் வாசஞ் செய்கின்ற பிரமாக்களெல்லாம், உக்கு இறந்து, உம்பர் ஆகம் விடும் - தேவர்களெல்லாம் அழிகின்ற, கட்ை நாளும் இறுதிக் காலத்திலும், திடம்பெற அடியேன் நித்தியத்துவம் அடையும்பொருட்டு (எ று) நீ - தோன்றா எழுவாய். தெளிவி . பயனிலை, ஏ-அசை (க உ) அயிராவதத்திடம் வளர்ந்த தெய்வயானையைத் தழுவுங் கடப்பமாலையை யுடையவனே உலக மயக்காகிய பரசமயவழியில் மயங்காமலும், பிரம்மாதி தேவர்கள் அழியுங் காலத்தில் அழியாமலும், நித்தியத்துவம் அடையும்பொருட்டு அவற்றின் முடிவான பொருளை எனக்கு விளக்கியருள். (கு உ) (1) ஐராவதமும் தேவசேனையும் - "கடதட கபோல வாரண விபுதை" - "கடவிகட குஞ்சரந் தங்கும் யான்ை". திருப்புகழ் 1159, 1219 - கந்தரலங்காரம் 67 குறிப்பும் பார்க்க