உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/783

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

297 25. குடிமராமத்தை நிறைவேற்றுதல்வசூலிக்கும் கட்டணங்கள் (ப. ச. 85. (2) (ப. ச. 126 (178. (2) (22) விதிகள் 1. பஞ்சாயத்து யூனியன் மன்றத்திடம், பாதுகாப்பிற் காகவும், நிர்வாகத்திற்காகவும் மாற்றப்பட்ட, பாசனவேலே கள் எவற்றலாவது பயன் பெறும் நிலங்களின் பதிவுபெற்ற சொந்தக்காரர்கள் எல்லோரிட்மிருந்தும் அந்த ரெவின்யூ ஜில்லா கலெக்டர், அப்போதைக்கப்போது ஏக்கர் ஒன்றுக்கு முடிவு செய்கிற வீதத்தில், மேற்படி மன்றம் ஆண்டுக் கட்டணம் வசூலிக்கலாம். சம்பந்தப்பட்ட பாசன வேலேயிலிருந்து நேரடியாகப் பாசனம் பெறும் நன்செய், புன்செய் நிலங்கள் விஷயத்தில் ஏக்கர் ஒன்றுக்கு விகிதப்படி கட்டணம் வசூலிக்கப்படும்; மேற்படி பாசன வேலேயிலிருந்து இறைவைப் பாசனம் பெறும் நன்செய் புன்செய் நிலங்கள் விஷயத்தில் மேற்படி கட்டணத் தில் பாதி வசூலிக்கப்படும். விளக்கம் மேற்கண்ட கட்டணம், நிலத்தின்மீது விதிக்கப்படத் தக்க ஏதேனும் நன்செய் அல்லது புன்செய் தீர்வை, தண்ணிர் விகிதத்திற்கு அதிகப்படியாக விதிக்கப்படத்தக்க தாகும். 2. மேற்படி கட்டணத்தை பஞ்சாயத்து யூனியன் மன்றம், கிராமத்தலைவர் மூலம் அல்லது அந்தக் கிராமம் அல்லது அதன் ஒரு பகுதியின் மீது அதிகார வரம்புடைய நில ரெவின்யு இலாகாவைச் சேர்ந்த ஊழியர்களேச் சேர்ந்த வேறு எந்த நபர் மூலமாவது வசூலிக்கப்பட வேண்டும். கலெக்டரின் பொதுவான அல்லது விசேஷ உத்தரவுகளின் கீழ், பஞ்சாயத்து யூனியன் மன்றம் அந்தக் கட்டணத்தை, நிர்வகிக்கவும் செலவு செய்யவும் வேண்டும். மேற்படி தொகையை கிராமத் தலைவர் வசூலிக்க வசதியான முறையில் மேற்படி கட்டணம் சம்பந்தப்பட்ட கோரிக்கைக் கணக்கைக் கர்ணம் அளிக்க வேண்டும். கிராமத் தலைவருக்கு அல்லது நில ரெவின்யு இலாகாவைச் சேர்ந்த ஊழியர்களில் யாராவது ஒருவருக்கு, பஞ்சாயத்துச் சட்டத்தின் 126-வது பிரிவின்கீழ் இது சம்பந்தப்பட்ட பொதுவான அல்லது III—20