196 யக்காரர்களின் வேலைகளேத் தாசில்தார்கள் கண்காணித்து மேற்பார்வையிட வேண்டும். வசூலாகி வருவதை தொடர்ந்தும், ழிகவும் கவனத் துடனும், கண்காணித்து வருவதும், வசூல் தொகையைக் கிராமப் பஞ்சாயத்து நிதியில் சேர்ப்பதும், அதைப்பற்றி வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு அவ்வப்போது தெரியப் படுத்துவதும், பஞ்சாயத்து வளர்ச்சி ஆதிகாரியின் கடமை களாகும். ர்ெவின்யு டிவிஷனல் அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டிய விஷயங்களில், வட்டார வளர்ச்சி அதிகாரி 644-ம் எண் அரசாங்க உத்தரவில் ஏற்பாடு செய் துள்ளவாறு நடவடிக்கை எடுத்துக்கொள்வார். கேள்வி 10.--வசூலித்த பணத்தை எவ்வாறு கட்டுவது? முடிவு.-பணம் கட்டுவதற்காக இப்போதுள்ள சலான் மணியக்காரர் தொகையை நேரடியாகப் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் சேர்ப்பிக்க வசதி செய்துதரும் வகையில், தகுந்த முறையில் மாற்றி அமைக்கப்படும். கேள்வி 11-வசூல் செய்யும் வேலேயை மணியக்கார ரிடம் ஒப்படைக்கத் தலைவர் மறுத்துவிடலாமா? முடிவு.-பஞ்சாயத்துத் தலைவர், வசூல் செய்யும் வேலே யைத் தாமே மேற்கொள்ளலாம். ஆல்ை, வரிவசூல் செய்யும் வேலையில் யாரையாவது அவர் நியமித்து, அதற்கு ஆகும் செலவிற்காகப் பஞ்சாயத்து நிதியைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். கேள்வி 12,-கிராமப் பஞ்சாயத்துக் காரியதரிசியின் அலுவல்களைச் செய்ய, கர்ணத்தை அமர்த்திக் கொள்ள லாமா, வேண்டாமா என்பது பஞ்சாயத்தின் விருப்பத்தைப் பொறுத்ததா? அதேபோல், கிராமப் பஞ்சாயத்துக் காரிய தரிசி வேலையைச் செய்யுமாறு அழைக்கப்பட்டால், அந்த வேலையைச் செய்வதா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் உரிமை கர்ணத்திற்கு உண்டா? - முடிவு.-இவ்விஷயங்கள் சம்பந்தமாய் 644-ம் எண் அரசாங்க உத்தரவிலுள்ள உத்தரவுகள் தெளிவாகவே உள்ளன. காரியதரிசி வேல் செய்யுமாறு அழைக்கப்புட் டால, முடியாது என மறுக்கக் கர்ணத்திற்கு அதிகாரமில்லே. ஆனால், பஞ்சாயத்துக் காரியதரிசியின் அலுவல்களேக்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/683
Appearance