பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 197 உதைகள் கொடுத்து, 'போதுமா வெகுமதி போதுமா பலகாரம்? இன்னம் கொஞ்சம் சாப்பிடும். வயிறு நிறைய வில்லை. இதோ எடுத்துக் கொள்ளும் சுடச் சுடப் பலகாரம்' என்று கூறிப்புரளிசெய்தவண்ணம் பாளையக்காரரைமர்த்தனம் செய்து கீழே தள்ளி அங்குமிங்கும் போட்டுப் புரட்டி மேன்மேலும் உதைத்துத் துதைக்க, பாளையக்காரர், 'ஐயோ! அப்பா போதும், போதும்; இனிமேல் அடித்தால் உயிர் போய்விடும்; புத்தி வந்தது. போதும் விட்டுவிடு. இனி நான் பூர்ணசந்திரோதயத்தின் ஜோலிக்கே போவதில்லை. அவளைச் சொப்பனத்திலும் நினைப்பதில்லை. வேண்டாம்; வேண்டாம். ஐயோ! மயக்கம் வருகிறதே! அடிக்காதே, செத்துப் போய் விடுவேன் போலிருக்கிறது' என்று அலறிக் கூக்குரலிட்டுக் கதறிப் புலம்ப அங்கிருந்த சபாநாயகர் முதலிய எல்லோரும், பஞ்சண்ணாராவ் செய்தது தக்க காரியம் என்று ஒருவகையில் திருப்தி அடைந்தனர். ஆனாலும், பாளையக்காரர் படும் வேதனையையும் அவரது அழுகையையும் கண்டு பெரிதும் இரக்கம் கொண்டு, 'பஞ்சண்ணாராவ்! போதும் போதும் விட்டுவிடு. விட்டுவிடு. பெரிய மனிதர். ஏதோ தெரியாமல் இந்தத் தவறில் இறங்கிவிட்டார். இனி புத்தி வந்துவிட்டது என்று அவரே ஒப்புக்கொள்ளுகிறார். போதும் நிறுத்தி" என்று கூற, உடனே பஞ்சண்ணாராவ் கடைசியாக ஓங்கிப்பின்புறத்தில் ஓர்உதை கொடுத்து, "அமீனா ஐயா! இதோ உம்முடைய கைதியை அழைத்துக்கொண்டு கீழே போம். இங்கே இருக்கும் எஜமான்கள் எல்லோரும் இந்தக்கூட்டத்தைக் கலைத்துவிட்டுப் போன பிறகு நீங்கள் ஜெப்தி செய்து கொள்ளலாம் ' என்று கூறிய வண்ணம், பாளையக்காரரை விசையாகத் தூக்கி எறிய அவர், "ஐயோ செத்தேன்" என்று கூறியவண்ணம் நுரைதள்ளிய வாயோடு வாசற்படியண்டை போய் விழுந்தார். உடனே அமீனா அவருக்குப் பின்னால் சென்று, அவரைத் தூக்கி நிறுத்தி நடத்தி அழைத்துக்கொண்டு கீழே இறங்கிப் போய்விட்டான்.