உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/695

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 6. எந்த அடிப்படையில் அனுமதி உத்தரவு கொடுக்கப்பட வேண்டும் ? ஒர் அரை ஆண்டு முடிவடைந்தவுடன், பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலர் (துணேப் பஞ்சாயத்து அலுவலர்) ஒவ் வோர் அரை ஆண்டு கால அளவுக்காக ஒவ்வோர் பஞ்சா யத்து சம்பந்தமாகவும் பிரத்தியேகமான ஓர் அறிக்கையை டிவிஷனல் பஞ்சாயத்து அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். அந்த அறிக்கையுடன் ஒரு ரசீதையும் அனுப்ப வேண்டும். அந்த ரசீது, சம்பந்தப்பட்ட கிராமப் பஞ்சாயத்துத் தலே வரால் முறைப்படி கையொப்பமிடப்பட வேண்டும். பஞ்சா யத்து வளர்ச்சி அலுவலரின் அறிக்கை வந்தவுடன், டிவி வடினல் பஞ்சாயத்து அதிகாரி முன் சொன்ன அலுவலர் கொடுத்த தொகைளேச் சரிபார்த்து, அவர் சிபாரிசு செய் துள்ள மானியத் தொகை சரியானது எனச் சான்று அளிக்க வேண்டும். டிவிஷனல் பஞ்சாயத்து அதிகாரியும், அனுமதி உத் தரவின் குறிப்பு ஒன்றைத் தயாரித்து, ரெவின்யு டிவிஷனல் அதிகாரியின் அங்கீகாரத்தைப் பெற்று அவருடைய பெயரில் அதைக் கொடுக்க வேண்டும். மேற்படி உத்தரவின் சரியான நகல்களுக்கு ரெவின்யு டிவிஷனல் அதிகாரி அல்லது அவ ருடைய சார்பில் டிவிஷனல் பஞ்சாயத்து அதிகாரி கையொப்பமிட வேண்டும். 7. மேற்படி தொகையை எவ்வாறு கிராமப் பஞ்சாயத்து நிதிக்கு வரவு வைக்க வேண்டும்? ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் சேரவேண்டிய தொகை யானது அரசாங்கு டிரஷரிகளில் பஞ்சாயத்து வைத்து வரும் பாங்க் கணக்கில் கணக்கெழுதுவதன் மூலம் செலுத் தப்பட்டதாக சரிக்கட்டப்பட வேண்டும். 86. கிராமப்பஞ்சாயத்து தொகுப்பு நிதியை sojeolpšići (Consolidated Fund) நடைமுறை உத்தரவுகளின்படி, ஒவ்வொரு நகரப் பஞ்சாயத்தும் கிராமப் பஞ்சாயத்தும் அருகாமையில் உள்ள அரசாங்க டிரஷரி பாங்குக் கணக்கு (சொந்த டெபாஸிட் கணக்கு) ஒன்றை வைத்துவர வேண்டும். நகரப் பஞ்சாயத்து விஷயத்தில் நிர்வாக அலுவலராகவும், கிராமப் பஞ்சாயத்துகளின் விஷயத்தில் தலைவராகவும்