8
மனத்தின் தோற்றம்
அறிந்தோம். எனவே, நரம்பு கயிறுபோல் இருந்து மூளையையும் மற்ற பகுதிகளையும் இணைக்கிறது என்பது தெளிவு. இதனை ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே, மாணிக்க வாசகர் என்னும் தமிழ்த் துறவி திருவாசகம் என்னும் நூலில்,
என்று அறிவித்திருப்பது ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. குப்பாயம் என்றால் சட்டை (Shirt) என்று பொருளாகும். சட்டையின் பாகங்கள் நூல் கயிற்றால் இணைத்துத் தைக்கப்படுவது போல, உடம்பு என்னும் சட்டையில் உள்ள மூளை - எலும்பு - உறுப்புகள், நரம்பு என்னும் கயிற்றால் தைக்கப்பட்டிருப்பதாக-தொடர்பு செய்யப்பட்டிருப்பதாகக் கூறியிருப்பது மிகவும் பொருத்தமாயிருக்கிற தன்றோ!
எலும்புகள் நரம்புகள் என்னும் கயிற்றால் பின்னப் பட்டிருப்பதாகத் திருத்தக்க தேவர் தமது சீவக சிந்தாமணி என்னும் நூலில் கூறியுள்ள பாடல் பகுதியும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது:
[2]“என்பினை நரம்பிற் பின்னி
- உதிரம் தோய்த்து இறைச்சி மெத்திப்
புன்புறத் தோலைப் போர்த்து
- மயிர்புறம் பொலிய வேய்ந்திட்டு
ஒன்பது வாயில் ஆக்கி
- ஊன்பயில் குரம்பை செய்தான்
மன்பெருங் தச்சன் நல்லன்
- மயங்கினார் மருள என்றான்.”
- ↑ திருவாசகம் - ஆசைப் பத்து - 2.
- ↑ சீவக சிந்தாமணி - கனக மாலையார் இலம்பகம் - 21.