பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா - FᎼᎼ6 புதிய உரை: தீயவற்றிற்கு அஞ்சி, அந்த அறியாமையிலிருந்து அகன்று. உறுதியாக உடல் காப்பதே உண்மையான மேன்மையாகும். ஒழுக்கத்தைப் பின்பற்றி உடலைக் காப்பதே உண்மையான அறிவாகும். விளக்கம்: தீமை செய்வதற்கு அஞ்ச வேண்டுமென்கிறார். அந்த அச்சவுணர்வுதான் தீமைகை ளப் ப ழிக்கும். தீச்செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும். தீய எண்ணங்களே ஈற்படாமல் அழிக்கும். அவ்வாறு நிர்மலமாக மாறுகிற நெஞ்சில்தான், நேர்மையும், நீர்மையும் நிறைந்துவரும். சாதாரண உடலைப் பொருள் என்ற வள்ளுவர், ஒழுக்கத்தால் சிறக்கின்ற அதே உடலுக்குச் செம் பொருளென்று பெயர் சூட்டுகிறார். உலகில் உங்களது தலையாய கடமை உடலைப் பண்பாற்றலுடன் பராமரித்துக் காப்பதுதான் என்று வலியுறுத்துவதற்காக, அறிவு, அறிவு என்று பல இடங்களில் குறிப்பிடுகிறார். அறிவு என்பது அறிய வேண்டிய ஆன்ம ஞானம். ஆறறிவு படைத்த மக்களே, நீங்கள் ஞானியாக மாற வேண்டாம். ஞானவான்களாக வாழுங்கள் என்ற தனது விருப்பத்தை விடாமல் கூறிக் கொண்டே வருகிறார். 359. சார்புஉணர்ந்து சார்புகெட ஒழுகின் மற்றழித்து சார்தரா சார்தரு நோய் பொருள் விளக்கம்: சார்பு உணர்ந்து - உடலின் துணையின் முக்கியத்துவத்தை அறிந்து சார்புகெட மனச்சாய்வும் ஒரு தலைப்பட்சமுமின்றி ஒழுகின் ஒழுக்கம்காத்து வாழ்ந்தால் மற்ற = பிற தீமைகளை சார்தரா - அனுகவிமடாமல் சார்தருநோய் - சார்ந்து வருகின்ற துன்பங்களை எல்லாம் அழித்து அழித்து விடும் சொல் விளக்கம்: சார்பு - துணை: சார்பு - மனமச்சாய்வு, ஒருதலைப்பட்சம் சார் - அணுகு; நோய் - வேதனை முற்கால உரை: ஒருவன் எல்லாப் பொருட்கும் சார்பாய அச்செம் பொருளை உணர்ந்து இருவகைப் பற்றுமற ஒழுக வல்லவனாயின், அவனை முன்