பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா பொலிவை இழக்க உடலோ வலிமையை இழக்க, வாழ்வோ வீறுகளையும் பேறுகளையும் இழக்க, உடல் அழியும். நாசமடையும். இதைவிட வேறு தண்டனை எதுவாக இருக்க முடியும்? உலகப் பேரின்ப வாழ்வுக்கு உடலே உதவுகிறது. உடல் அழிந்தால் உயர் வாழ்வும் கனவுதானே என்று 6 வது குறளில் அருமையாகப் பதிய வைக்கிறார். 177. வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் களிதாம் பயன் பொருள் விளக்கம்: வேண்டற்க - விரும்பவே வேண்டாம் வெஃகியாம் = பிறர் பொருளைக் கவர்ந்து வளர்க்கின்ற ஆக்கம் = தேகம் விளைவயின் = அந்தத் தேகத்திலே சம்பவிக்கின்ற கர்ப்பமும் மாண்டற்கரிதாம் = மகிமைப்படுவதில்லை பயன் = (அதனால் ஏற்படும் பயன்) பயமன்றி வேறில்லை சொல் விளக்கம்: ஆக்கம் = பொன், பொருள், பொன் என்றால் உடல் விளை = விளைகின்ற, சம்பவிக்கின்ற வயின் = வயிறு (வயிறு என்பதற்கு கர்ப்பப்பை) பயன் = பயன், வினைப்பலன் முற்கால உரை: பிறர் பொருளை அனுபவிக்கும் பொழுது, அது பயன்படாமையால், அப்பொருளை விரும்பாது ஒழிக. தற்கால உரை: பிறர் பொருளைக் கவர்வதால் உண்டாகும் நலத்தை விரும்பாதொழிக. முடிவில், அதன் பயன் நன்மை இல்லாததாய் முடியும். புதிய உரை: அடுத்தவர் உடமையைக் கவர்ந்து அனுபவிப்பதால், வளர்க்கப்படுகிற உடம்பில் உண்டாகும் கர்ப்பமும், மாட்சிமை இல்லாததால் மானமிழக்கும். முடிவில் விளைகின்ற பயன், பயமும் அசசமும கலநத வாழவுதான.