பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை I65 கோடாமை = நடுவுநிலை தவறாமையாகிற பண்பானது சான்றோர்க்கு = உலகம் நிலைபெறும் வண்ணம் வாழும் அறிவொழுக்கம் பெற்ற பெரியோர்களுக்கு அணி = பெருமை தரக்கூடியதாகும். சொல் விளக்கம்: சொல் = செங்கோல், அரசாட்சி, தராசு சமன் = சமம், ஒப்பு, காலன்: சீர்தூக்கும் = ஒழுங்கு செய்தல், தண்டித்தல், வாழ்வு தருதல் அமைந்து = செய்து முடித்து: கோடாமை = நடுநிலை தவறாமை அணி = பெருமை, அழகு, ஒருபால் = கடமை, உரிமை, பக்கம் முற்கால உரை: ஒரு பக்கமும் சாயாமையே பெரியோர்க்கு அழகு. தற்கால உரை: துலாக் கோல் போல் சமமாக நின்று ஏதொன்றிலும் தீர்ப்பு வழங்குவதுதான் சான்றோர்க்கு அழகான பண்பாகும். புதிய உரை: எல்லோரையும் சமமாகப் பாவித்து அவரவர் உரிமையை கடமையை மதித்து ஒழுங்கு செய்தும் தண்டித்தும் வாழ்வு தருகிற ←%{ {Jé நெறிபோல நிலைநிறுத்தி செயல்படுவதானது, சான்றோர்களுக்குப் பெருமை தரக்கூடியதாகும். விளக்கம்: சமமாகப் பாவிப்பது அரசநெறி. சமன் என்பதற்கு காலன் என்று ஒரு பொருள். அரசன் முதல் ஆண்டி வரை அனைவருக்கும் ஒரே நீதியுடன் உயிர் பறிக்கும் செயல் கொண்டவன். அதுபோல மலர்தலை உலகத்துக்கு உயிராகப் போற்றப்படும் மன்னன் நீதிமுறைபோல், நடுநிலைமை காக்கிறவர்களும் இருக்க வேண்டும். கோயிலில் வாழும் இறைபோல நிறைகாக்கும் மன்னன் போல, குறைவிலாத வகையில் செயல்பட வேண்டும் என்று நடுவு நிலைமையாளரின் உயரிய நிலையை 8 ஆம் குறளில் கூறுகிறார். 119. சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின் பொருள் விளக்கம்: ஒருதலையா ஒருபக்கமாக உட்கோட்டம் மனத்துக்குள்ளே பொறாமை அ புக்காறு