பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 3. துறவற வியல் இல் ஒழுக்கம் பற்றிய இலக்கணத்தை இல்லறவியலில் எடுத்துக் கூறிய வள்ளுவர், தொடர்ந்து துறவறவியல் எனும் சீரிய பகுதிக்குள் வந்து விட்டார். துற அற + இயல் = துறவறவியல் துற வறம் வியல் = துறவறவியல் இவ்வாறு இத்தலைப்பைப் பிரித்துப் பார்க்கிறோம். துற பற்றொழித்தல்; அறம் = ஒழுக்கத்துடன் இயல் - இலக்கணம். பற்றொழிக்கும் ஒழுக்கத்திற்கு இலக்கணம் வகுக்கும் பகுதி என நாம் பொருள் கொள்ளலாம். துற பற்றொழித்தல்; வறம் - பூமி, வியல் = பெருமை. பூமி வாழ்விலிருந்து பற்றொழித்து வாழ்கிற பெருமையை விளக்கும் பகுதி என்றும் நாம் பொருள் கொள்ளலாம். பற்றொழித்தல் என்கிறபோக உள்ளத்தில் உள்ளதை, உலகத்தில் உள்ளதை, தனக் கென உள்ளதையெல்லாம் உதறிவிட்டு, உலகில் வல்லமையோடு, வளமான தூய்மையோடு வாழ்ந்து காட்டும் வண்மையான வாழ்வு முறை இது. பற்றொழிக்கும் பாங்கிலும் மூன்று நிலைகள் உள்ளன. 1. துறவு நிலை, 2. அறவு நிலை, 3. இறவு நிலை உடலால் உலகம் நடை முறைகளைத் துறந்து விடுவது முதல் நிலை. அளவு என்றால், மிகவும் தெளிவாக. செம்மையாக உலகப் பற்றையெல்லாம் மனதிலிருந்து அறுத் தெறிவது இரண்டாம் நிலை. இறவு என்றால், உள்ளத்திலிருக்கும் பந்தபாசம், சொந்தம் சுற்றம்; சுகம், இகம் எல்லாவற்றையுமே * இற்றுப் போகவும், இனிமேல், அப்படி எதுவும் எழாதவாறு இதய வண்மையோடு வாழ்வது. மூன்றாம் நிலை. இதுதான் இறைநிலை. இப்படி இருப்பவரைத்தான் இறைவன் என்று அழைப்பார்கள். துறவு வாழ்க்கைக்கு இரு கண்கள் போன்றவை தவம் காக்கும் விரதங்கள். தெளிந்து வரும் ஞானங்கள்.