பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 தமிழ் நூல் தொகுப்புக் கலை திருநாவுக்கரசர் தேவாரம் திருநாவுக்கரசர் கூற்றாயினவாறு' என்று தொடங்கும் பதிகம் முதல் ஒரு மானைத் தரிக்கும்’ என்பது ஈறாக நாற் பத் தொன்பதாயிரம் பதிகங்கள் பாடியிருப்பதாகத் திருமுறை கண்ட புராணம் கூறுகிறது. பாடல்: 'குருநாமப் பரஞ்சுடரைப் பரவிச் சூலைகொடும் 'கூற்றாயின என எடுத்துக் கோதில் ஒரு மானைத் தரிக்கும் ஒருவரையுங் கூறும் ஒரு நாற்பத் தொன்பதி னாயிரம தாக..." (15) என்பது பாடல் பகுதி. காப்பிட்டிருந்த அறையிலிருந்து எடுத் துத் தூய்மை செய்து கிடைத்த பதிகங்கள் 321 பதிகங்கள் என அதே புராணம் கூறுகிறது: - 'நண்புற்ற நாவரசர் முந்நூற் றேழ்மூன்றினால்' (25) என்பது பாடல் பகுதி. சம்பந்தர் பதினாறு யாண்டுகள் இருந்ததாகவும், நாவுக் கரசர் 81 யாண்டுகள் வாழ்ந்ததாகவும் சொல்லப்படுகின்றனர். எனவே, சம்பந்தர் பாடிய பதினாறாயிரம் பதிகங்களைவிட மிகுதியாக, நாவுக்கரசர் நாற்பத்தொன்பதாயிரம் பதிகங்கள் பாடியிருப்பதில் வியப்பில்லை. சம்பந்தர் இளமையிலேயே பாடத் தொடங்கிவிட்டார். நாவுக்கரசரோ ஒரளவு அகவை வளர்ந்தபின் பாடினார் என்பதும் நினைவுகூரத் தக்கது. நாவுக்கரசர் தேவாரப் பாடல்கள், நான்காவது - ஐந் தாவது - ஆறாவது திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. நான்காம் திருமுறையில் 113 பதிகங்களும் 1070 பாடல்களும், ஐந்தாம் திருமுறையில் 100 பதிகங்களும் 1015 பாடல்களும், ஆறாம் திருமுறையில் 99 பதிகங்களும் 1981 பாடல்களுமே உள்ளனவாக இப்போது கிடைத்துள்ளன. ஆக மொத்தம் 312 பதிகங்களும் 3066 பாடல்களுமே இப்போது உள்ளன. திரு முறை கண்ட புராணத்தில், 321 பதிகங்கள் எனக் கூறப்பட் டுள்ளது. அவற்றுள்ளும் ஒன்பது குறைந்து இப்போது 31.2 பதி கங்களே இருப்பது நமது தீப்பேறாகும்.