பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 - தமிழ் நூல் தொகுப்புக் கலை பாவலராவர். இவர் ஆக்சுஃபோர்டு பல்கலைக் கழகத்தில் புலமைத்துறைத் தலைவராய் (Professor of Poetry), விளங்கிய வர். திறனாய்வுத் துறையிலும் வல்ல இப்புலவர் பெருமானால் தொகுக்கபட்ட இந்நூல், உயர்ந்த பல உணர்ச்சிப் பாடல் களைப் படித்து மகிழும்படி மக்களுக்குக் கல்விச்சுவை ஊட்டி யது. விக்டோரியா காலத்து (Victorian Period) உணர்ச்சிப் பாடல்களுள் மிகச் சிறந்தவை இந்நூலில் இடம் பெற்றிருந் தன. பொதுவாக, கி.பி. 1550 முதல் 1850 வரையிலுமான முந்நூறு ஆண்டுகாலப் பாடல்களுள் மிகச் சிறந்தவை இந் நூலுள் தொகுக்கப்பட்டன என்று கூறலாம். இந்நூற் பாடல் கள், ஆசிரியர் வாரியாகவோ காலவாரியாகவோ இல்லாமல், தலைப்பு வாரியாக வரிசைப்படுத்தப் பட்டுள்ளன. பல தலைப்புக்களை, அதாவது பல பொருள்களைப் பற்றி அறிய விரும்புவோர், இந்தப் பொன்னான கருவூலத்துக்கு வருகை புரியலாம். இதற்கு ஒப்பான சிறந்த தொகைநூல் ஆங்கி லத்தில் வேறு இல்லை என்பது பலரது கருத்து. - ‘#ff gyř5ř stávaṁ Garrở” (Sir Arthur Quiller-Couch) arcirugust Gorgâg, ‘Oxford book of English Verse' assissyli, நூல் 1900-ஆம் ஆண்டு வெளியாயிற்று. இது 1939 வரை புதிய பதிப்புப் பெற்றுச் சிறந்து மிளிர்ந்தது. (மற்றும் இதை ஒட்டிய காலத்தில் இன்னும் பல நூல்கள் எழுந்தன. அவற்றுள், தெ லா மேர் (De La Mare) என்பவர் GASTG#45 "Come Hither’ (இங்கே வந்து காண்க) என்ற நூலும், ஆடன் (W. R. Audel) என்பவர் தொகுத்த, 'The Poets Tongue (புலவர் நாக்கு) என்னும் நூலும் குறிப்பிடத் தக்கன. ராபர்ட் பிரிட்ஜஸ் (Robert Bridges) என்னும் அறி ஞர் 1961-இல் தொகுத்த 'The Spirit of Man" (மாந்தனின் ஆர்வ எழுச்சி-உள்ளக் கிளர்ச்சி) என்னும் நூலும் சிறந்த தொன்றாகும். இந்நூல்கள் குறிப்பிட்ட கொள்கையை-நோக் கத்தை அடிப்படையாக வைத்துத் தொகுக்கப்பட்டவையாகும். 'ஃஅரியட் மன்றோ (Harriet Monroe) அலிஸ்கொர்பின் &Taoil-forcir' (Alice Corbin Henderson) storglih 2.0ldifiéâlî