பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 419 சொல் விளக்கம்: தன் - ஆன்மா, தான் - தாள் எனும் சுயப்பற்று மன்னுயிர் - சீவன், ஆன்மா: எல்லாம் - உலகம் முழுதும். முற்கால உரை: தன்னுயிரைத்தான் தனக்குரித்தாகப் பெற்றவனை. அது பெறாதனவாகிய மன்னுயிர்களெல்லாம் தொழும். தற்கால உரை: தன்னுயிர் என்றும், தான் என்றும் உண்டாகும் பற்றுகள் முழுமையாக நீங்கப் பெற்ற தவத்தினனை, மற்றை உயிர்கள் எல்லாமும் வணங்கும். புதிய உரை: தனது ஆன்மாவில் உள்ள தான்' எனும் அகப் பற்றினை முழுதும் நீங்கிய துறவியை, இந்த உலகத்திலுள்ள எல்லா உயிர்களும் தொழுது வணங்கும். விளக்கம்: தன் என்றாலும் ஆன்மா. உயிர் என்றாலும் ஆன்மா. உயிர்க்காற்று ஆன்மா உள்ள உடல் கொண்ட எல்லோருக்கும், தான் என்ற அகங்காரம், தான் என்ற அகம்பாவம், சுயமோகம் நிறையவே உண்டு. ஒருவரை அடியோடு அழிப்பது நோய், முதுமை, மற்றும் இயற்கை விபத்துகள் என்பதை விட, ஒருவரது தான் என்ற மோகமே முக்கிய காரணமாகிறது. 'இறைவனே! என்னை விரட்டுகிற ஒரு தீயவனிடமிருந்து காப்பாற்று. அந்தத் தீயவன் வேறு யாருமல்ல. நானேதான்!” என்கிறார் ஒர் அறிஞர். தானே தனக்கு நட்டாரும் பகைவனும் என்பதுபோல, தான் எனும் அழிவு சக்தியான திமிர் எண்ணத்தை, தன் ஆன்மாவிலிருந்து, எவன் விரட்டியடிக்கிறானோ, அவன் தான் வீரமகன், விவேகி, வெற்றித் துறவி. இந்தக் குறளில், தவத்திற்கு ஆன்மாவே வழித்துணை என்று புலப்படுவதற்காக, வள்ளுவர், தன். உயிர், தான் , மன்னுயிர் என்று நான்கு இடங்களில் குறித்துக் காட்டியிருக்கிறார்.