பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 25. அருளுடைமை உடலால் பற்றுகளைத் துறப்பதை துறவு எனவும், துறவு பூண்டவரைத் துறவி என்றும் கூறுவார்கள். உடலாலும் மனத்தாலும் பற்றுகளை அறுத்தெறிபவரை அறவு கொண்டவர். அவரை அறவி என்று அழைப்பார்கள். உடலால், மனத்தால் ஆத்மாவினால், முற்றும் களைந்தவரை, பற்றுக்களை அழித்து உயர்ந்து நிற்ப வரை இறவு என்றும் அத்தகைய ஆற்றலாளரை, இறவி என்றும் பூசிப் பார்கள். இறவியானவரே, இறைவியாகி, இறைவனாகின்றார்கள். இப்படிப்பட்ட மூன்று நிலைகளிலும் ஒவ்வொன்றாகக் காலூன்றி, தடம் பதித்து, திறம் விளைத்து, திண்மையிலும் தூய்மையிலும் நிறைந்து நிற்க வேண்டியது மெய்யல்லவா! அதனால், துறவறவியலில் முதல் அதிகாரமாக அருளுடைமெய் என்னும் அதிகாரத்தைப் படைத்துள்ளார். அருள் உடை மெய் என்று அருளுடைமை ஆகிறது. கருணை, நல்வினை, தயவு, இரக்கம், கொடை என்னும் சொற்கள் எல்லாம் அருள் என்பது என்ன என்று விளக்குகிறது. உடுப்பு, சூரியன், மனம் நெகிழு என்ற சொற்கள் எல்லாம் உடை என்பதற்கு உட்பொருளைத் தருகின்றன. o மெய் என்ற சொல்லோ மேனியைக் குறிப்பதோடு, உண்மை சத்தியம், திண்மை என்றெல்லாம் அர்த்தத்தை அளிக்கிறது. ஆக, கருணைச் சூரியனாகக் காட்சியளிக்கும் மெய்தான் அருளுடைமெய் ஆகிறது. இரக்கத்தால் இதயம் நெக்குருகி, மனம் நெகிழ்ந்து, உயிரின் உடுப்பாக ஆகியிருக்கும் மெய்யே, துறவறத்தைக் காக்கும் தூய சத்தியம் ஆகிறது. உடை தோற்றத்தால் மட்டும் துறவியாக இருக்கக் கூடாது. உடல் காட்சி தருவதே துறவறத்தின் பெருமையைப்