#40 54. அப்பீல் செய்துகொள்வதற்கான கால அளவு [L. &. 178. (2) xii.] விதிகள் பஞ்சாயத்துச் சட்டத்தில் அல்லது அதன்கீழ் செய்யப் பட்ட விதிகளில் வேறு விதமாய் வெளிப்படையாக வகை செய்திருந்தாலன்றி, மேற்படி சட்டத்தின்படி, அல்லது அத் தகைய ஏதாவது ஒரு விதியின்படி அப்பீல் ஒவ்வொன்றும், 1908-ம் ஆண்டு இந்திய கால வரையறைச் சட்டத்தின் [Indian Limitation Act, 1908] 5-6,131 of 63&r off;5 களுக்கு உட்பட்டு அடியிற் கண்டவாறு கலெக்டருக்குச் செய்து கொள்ளப்பட வேண்டும்: (a) லேசென்ஸ், அல்லது அனுமதி அளிக்கிற உத்தர வின்மீது அப்பீல் செய்துகொள்வதால்ை, அந்த உத்தரவு பஞ்சாயத்தின் விளம்பரப் பலகையில் வெளியிடப்பட்ட தேதிக்குப் பிறகு 30 நாட்களுக்குள் செய்து கொள்ள வேண்டும். (b) மற்ற விஷயங்களில், எந்த உத்தரவின்மீது, அல்லது நடவடிக்கையின்மீது அப்பீல் செய்து கொள்ளப் படுகிறதோ அந்த உத்தரவு அல்லது நடவடிக்கை வந்து சேர்ந்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் செய்து கொள்ள வேண்டும். 55. வீடுகளில் உள்ள கக்கூஸ்-கள், சாக்கடைகளை சுத்தம் செய்தல் (ப. ச. 63. (இ)) (ப. ச. 178. (2) (xxx)) விதிகள் 1. பஞ்சாயத்து ஒவ்வொன்றும் தனியார் வீடுகளிலுள்ள கக்கூஸ்கள், சாக்கடைகள் ஆகியவற்றை தினந்தோறும் சுத்தம் செய்வதற்காகப் போதுமான ஏற்பாடுகளேச் செய்ய வேண்டும். 2. பஞ்சாயத்தானது, மேற்படி வீடுகள், அல்லது இல்லத்தின் சொந்தக்காரர், அல்லது அனுபோகதாரரிட மிருந்து மேற்சொன்னவாறு சுத்தம் செய்வதற்கான செலவு குறித்து கட்டணம் ஒன்றை வசூலிக்கலாம்,
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/627
Appearance