உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 பொறுப்புகளையோ பைசல் செய்வதற்கு உ சி த மான உத்தரவுகளே அரசாங்கம் பிறப்பிக்கலாம். (b) பஞ்சாயத்து அபிவிருத்தித் தொகுதி ஒன்றில் உள்ள பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் ஒன்று, குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் தனது அதிகார வரம்பை நிறுத்திக் கொண்டு விடுமானல், பிறகு அந்தக் கவுன்சிலுக்குக் சொந்தமான ஆஸ்திகள், ஸ்தாபனங்கள், பொறுப்புகள் ஆகியவற்றை பைசல் செய்வது பற்றி அரசாங்கம் தனக்கு உசிதமாகத் தோன்றும் உத்தரவுகளேப் பிறப்பிக்கலாம். அவ்வாறு பிறப்பிக்கப்படும் உத்தரவில், அவசியமானது என்றும், அனுகுணமானது என்றும், தொடர்பானது என்றும், விளைவானது என்றும் அரசாங்கம் கருதக்கூடிய ஏற்பாடுகள் எல்லாம் அடங்கியிருக்கலாம்.

  • (i) அந்தப் பஞ்சாயத்து யூனியனுக்கு சேர வேண்டிய வரி, கட்டணம் அல்லது வேறு தொகைகளே எங்கே, எவரிடம் செலுத்த வேண்டும் என்பது பற்றிய திட்டவட்டமான விபரம் அந்த அறிவிப்பில் காணப்பட வேண்டும்.

(ii) பஞ்சாயத்து அபிவிருத்தித் தொகுதியிலே உள்ளதொரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலானது ஏதா வது ஒரு பகுதியில் தனது நிர்வாகப் பொறுப்பை நிறுத்திக் கொண்டுவிட்டால், அப்பகுதியிலிருந்து பஞ்சாயத்து யூனிய னுக்குச் சேரவேண்டிய வரி, கட்டணம், மற்ற தொகை முதலியவற்றை எந்த அதிகாரியிடம் செலுத்த வேண்டும் என் பதும் அந்த அறிவிப்பிலே குறிப்பிட்டிருக்க வேண்டும். இது சம்பந்தமான அப்பீல்கள், விண்ணப்பங்கள் முதலியவை எவரிடம் செய்து கொள்ள வேண்டும் என்பதும் அந்த அறிவிப்பிலே குறிப்பிடப்பட வேண்டும். பஞ்சாயத்துகளையும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்களையும் அமைத்தல் 8. கிராமங்களுக்கும் பட்டணங்களுக்கும் பஞ்சாயத்துகளை அமைப்பது. . 夺 (1) ஒவ்வொரு கிராமத்திற்கும், ஒவ்வொரு பட்டணத திற்கும் ஒரு பஞ்சாயத்தை அமைக்க வேண்டும். அப்படி பஞ்சாயத்து ஏற்படுத்த வேண்டிய தேதி எது என்பதை இன்ஸ்பெக்டர் ஒர் அறிவிப்பின் மூலம் குறிப்பிடுவார்.