234 அல்லது லேசென்சைப் புதுப்பித்துக் கொள்வதற்காக செய்து கொள்ளப்படும் மனு அல்லது அனுமதிக்காக செய்து கொள்ளப்பட்டிருக்கிற எவற்றையும் எந்தக் கால அளவுக்கு தேவைப்படுகிறதோ, ஓர் ஆண்டுக்கோ அல்லது மனுவில் குறிப்பிட்டுள்ளபடி அதற்கும் குறைவான கால அளவுக்கோ இருக்கலாம். அந்தக் கால அளவின் அல்லது அதன் ஆரம் பத்தின் மிக முந்திய தேவைப்படும் தேதிக்குமுன் முப்பது நாட்களுக்கு குறையாமலும், தொண்ணுாறு நாட்களுக்கு மேற்படாமலும் முன்னதாக செய்துகொள்ளப்பட வேண்டும். (2) மேலே சொல்லப்பட்டிருக்கிறதைத் தவிர, மற்றபடி அத்தகைய ஒவ்வொரு லேசென்ஸ் அல்லது அனுமதிக் காகவும் சந்தர்ப்பத்துக்கேற்ப, பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அல்லது பஞ்சாயத்து நிச்சயிக்கக்கூடிய யூனிட் டுகள் மீதும் விகிதங்களிலும் அனுசரித்தும், நிர்ணயிக்கப் பட்ட அதிகபட்ச விகிதம் எதுவுமிருந்தால், அதற்கு மேற் படாமலும் கட்டணம் விதிக்கலாம். (3) மேலே சொல்லப்பட்டிருப்பதை தவிர, மற்றபடி லேசென்ஸ் அல்லது அனுமதிக்கான மனுவின்பேரில் பிறப் பிக்கப்படும் உத்தரவுகள் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி யிடம் அல்லது பஞ்சாயத்து யூனியனின் கமிஷனரிடம் மனு' வந்து சேர்ந்த முப்பது நாட்களுக்குள் அல்லது ஏதாவது ஒரு பிரிவைச் சேர்ந்த விஷயங்களில் இன்னும் அதிகமான கால அளவு நிர்ணயிக்கப்பட்டிருந்தால், அந்தக் கால அளவுக்குள் மனுதாரருக்கு தெரிவிக்கப்படாவிட்டால், அந்த மனு சாதா ரணமாக எந்த காலஅளவுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடுமோ அதுவரையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கருதப் படும். மேலும், அது சட்டம், விதிகள், துணே விதிகள், சாதாரணமாக விதிக்கப்படும் நிபந்தனேகள் ஆகியவற் றுக்கும் உட்படும். (4) ஒரு லேசென்சுக்காக அல்லது அனுமதிக்காக முன் கூட்டியே செலுத்தும் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டதால் மட்டுமே மனுதாரர் லேசென்ஸ் அல்லது அனுமதி பெற உரிமை பெற்றவராகிவிடமாட்டார். லேசென்ஸ் அல்லது அனுமதி மறுக்கப்பட்டால், கட்டிய பணத்தைத் திரும்பப் பெற மட்டுமே அவருக்கு பாத்தியதை உண்டு. (5) அனுமதி அல்லது லேசென்ஸ் தேவைப்ப்டும் எந்த ஒரு காரியத்துக்காக அவசியமோ அந்தக் காரியத்தை இல ஸ் அல்லது அனுமதி இன்றி செய்யப்பட்டால்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/425
Appearance