உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1054

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

orgin

1053

orginate answer


origin : தோற்றுவாய்;தொடக்கம் : குறியீட்டு முறையில் ஒரு செயல்முறையின் அல்லது செயல்முறைப் பகுதியின் முதல் அமைவிடத்தின் முழுமையான நினைவக முகவரி.

original : மூலப்படி.

original equipment manufacturer (OEM) : மூலச்சாதன உற்பத்தியாளர் : மற்ற விற்பனையாளர்களிடமிருந்து சாதனங்களை விலைக்கு வாங்கி தனியொரு பொறியமைவாக ஒருங்கிணைத்து மறுவிற்பனை செய்யும் உற்பத்தியாளர்.

Original Macintosh Keyboard : அடிப்படை மெக்கின்டோஷ் விசைப்பலகை : தொடக்க கால ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியுடன் தரப்படுவது. இது மிகவும் சிறியது. எண் விசைப் பகுதி மற்றும் பணிவிசைகள் (Function keys) இல்லாதது. ஏறத்தாழ தட்டச்சு விசைப் பலகையை ஒத்தது. 58 விசைகளைக் கொண்டது. தட்டச்சுப் பலகையிலிருந்து இரண்டே இரண்டு மாற்றங்கள். கீழ் வரிசையில் இருபுறமும் உள்ள விருப்பத்தேர்வு விசைகள். இடவெளிப்பட்டையின் இடப்புறம் கட்டளை விசையும், வலப்புறம் நுழைவு விசையும் உள்ளன (Enter key).

படிமம்:Computer macintosh 128k, 1984 (all about Apple onlus) (cropped). jpg
அடிப்படை மெக்கின்டோஷ் விசைப் பலகை

original message : மூலத்தரவு.

orginate : தொடங்கு.

originate answer : தொடங்கு/மறுமொழிச் சாதனம் : செய்திகளை உண்டாக்கி மறுமொழி யளிக்கக்கூடிய ஒரு சாதனம். பெரும்பாலான தொலைக்கணினிச் சாதனங்கள் மறு