பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/685

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

665


வண்ண மலர்களை நிறைவேற்றினார். விரித்த அரக்கு புழகுக்கு இஃதொரு தனிச்சிறப்பாகும். 69. கருங்காலி மலர். மாரோடம். மாரோடம் என்பது இதன் பெயர். தழைத்திருப்பதைக் குறிக்கப் 'பசுமாரோடம்' என்றும், மணத்தைக் குறித்து "நறுமாரோடம்" என்றும், பூவின் அளவைக் குறிக்கச் சிறு மாரோடம் 2 என்றும் பாடினர். கொங்கு வேளிர் அணி மாரோடம் 8 என்றார். அழகிய மரப்பொருள்கள் செய்யப் பயன்படுத்தும் கருங்காலி (RCSE WOOD) மாரோடம். இப் பூ செம்மை நிறத்தது. இது குறித்தே உரையாளர் இதனைச் செங்கருங்காலி என்றனர். இது மலை நிலத்து மரம். கொங்குவேளிரும் உதயணன் குறிஞ்சி நிலத்தைக் கடக்கும் பகுதியில் இதனை வைத்துப் பாடினார். எனவே இது குறிஞ்சி நிலப் பூ. இது நறுமணங் கமழும் பூ. "நறுமா சோடமொடு உடனெறிந்து அடைச்சிய செப்பு இடந்தன்ன நாற்றம்' . - என அதிரல், பாதிரி இவற்றுடன் பெய்துவைத்த செப்பைத் திறந்தால் நாறுவதைப் பெருங்கடுங்கோ பாடினார். இப்பாடல் "முதிரா வேனில் எதிரிய மலர்களாகக் குறிப்பதால் இது இனவேனிற் பூ. 'பசுமா ரோடமொடு ஆம்பல் இவள் . . . போது அவிழ் முச்சி ஊதும் வண்டே' என்னும் அடிகள் மகளிர் உச்சியில் சூடியதையும், வண்டு மொய்க்கும் மணத்தையும் காட்டுகின்றன. எனவே இது சூடும் பூ, • ‘ மரத்தால் 'கருங்காலி மலராயினும் செயலால் காட்டிக் கொடுக்கும் ‘கருங்காலி அன்று. - * Ti೫7 5, 33 - 6. 2 குறி. பா 18, ஐங் 93 , 3 பெருங் , உஞ்சை : 50:31 . ... x.