பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221


ஆய் - தாய் மேலும், ஆடு (வலிமை) - தாடு (வலிமை; யாழ்ப்பாணத்து மாணிப்பா அகராதி) ஆரம் (முத்துமாலை) - தாரம் (முத்து : யாழ்ப்பாணத்து மாணிப்பா அகராதி) ஆழி (கடல்) -- தாழி (கடல் : யாழ்ப்பாணத்து. மாணிப்பா அகராதி) бт6йтLiбот, ஆம் (நீர்) - தாம் (நீர்)-என வளர்ந்தமைக்கு ஒப்புக் காட்டுபவை. தாம்’ என்பது நீர் என்னும் பொருளில் அருகி வழங்கும். ஆற்றில் நீர் தடைப்படாமல் ஒடும் பிரிவிற்குத் தாம் - போகி = தாம்போகி (தாம்பு + போகு + இ என்று பெயர். இந்தத் தாம் அம் விகுதி பெற்றுத் தாமம்’ என்றாகும். 'தாமம்’ என்னும் உருவம் நீர்’ என்று பொருள்படுவதைப் பழங்கால வழக்கெனப் பழந்தமிழ்க்சொற்கள் பயிலும் யாழ்ப்பாணத்து அகர முதலி காட்டுகின்றது. இன்றும் யாழ்ப்பாணத்தில் நாட்டுப் புற வழ்க்கு என்பர். தாமரையை மலர்த்துபவன் என்பதால் கதிரவனுக்குத் “தாமன் என்று ஒரு பெயர். கங்கைகொண்டசோழபுரத்து கோவில் உள் மண்டபத்தில் கதிரவன் தேர்ச்சிற்பம் என்றுள்ளது. அதில், கதிரவன் தாமரை வடிவத்தில் செதுக் கப் பட் டு ள் ளா ன், “தாமன் மேல் வரவா'1 -எனக் கதிரவனைத் தாமன் என்று வில்லிபுத்துTரார் ஆட்சி காட்டுகின்றது. காம் - காமம் - காமர் - காமரு-என்றானது போன்று ஆம் - தாம் - தாமம் - தாமர் - தாமரை எ ன் றா யிற்று. இவ்வாறு ஐ இறுதியைப் பெற்றமையை, 'ஐ (தாமரை) அம் (வெள்ளம்) பல் (ஆம்பல்) என வரூஉம் இறுதி'2 - என்னும் தொல்காப்பியத் தாலும் உணரலாம், 1. வில்லி : முதற்போர் : 42 2 தொல் : எழுத்து 894,