இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
318 : .. லக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் எதிர்க்கும்படி விரட்ட வேண்டாம். அதனால் உனக்குத் தீங்கு நேரிடும். அ ஹெர்பெர்ட் வேதங்கள்
- தர்ம ஸ்தானங்கள் பதினான்கில் அங்கம் ஆறு உபாங்கம் நான்கு
வேதம் நான்கு- தமிழில் மிகவும் பிரசித்தமான நீதி சாஸ்திரமாகிய குறள் தமிழ் வேதம் என்று சொல்லப்படுகிறது. அ. காஞ்சி பூரீ காமகோடி பீடாதிபதி பூரீ சங்கராசாரியார்
- சில பேர் ‘வேதத்தை நம்ப முடியுமா? அதற்கு ஒரு யுக்தி சொல் லுங்கள் என்று கேட்கிறார்கள். புக்திக்கு எட்டுமானால், அதை வேதம் சொல்லுவானேன்? யுக்திக்கு எட்டாததைச் சொல்லத்தான் வேதம் இருக்கிறது.
அ. காஞ்சி பூநீ காமகோடி பீடாதிபதி பூநீசங்கராசாரியார்
- எதை ருசுவினால் நிரூபிக்க முடியாதோ, எங்கே புத்தி
எட்டவில்லையோ, அதற்காகத்தான் வேதம் ஏற்பட்டிருக்கிறது. இந்திரியங்களுக்கு அகப்படாததை விளக்குவது வேதம். அ. காஞ்சி பூரீ காமகோடி பீடாதிபதி பூரீ சங்கராசாரியார் வேலை
- எனக்கு வேலையில் பிரியம்: அது என்னைக் கவர்ந்துவிடு கின்றது. நான் அமர்ந்துகொண்டு மணிக்கணக்காக வேலை
செய்வதைப் பார்த்துக்கொண்டேயிருப்பேன். க. ஜே.கே, ஜெரோம்
- மனித சமூகத்திற்கு உண்மையாக நன்மை செய்ய வேண்டுமென்று ஒருவன் விரும்பினால், அவன் மனிதர்களை
அவர்களுடைய வேலையின்மூலமாகவே அணுகவேண்டும். அ. ஹென்றி ஃபோர்ட்