பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tu. Zratoovoratő” :: 295 பெரும் அளவுக்கு அவர்களுடைய் இனமே முக்கியமான காரணமாகும். அ மில்ஸ் LfJL6T)L[] சரியான தத்துவங்களிலிருந்து தவறான முடிவுகளைப் பெறுவது மடமை. பைத்தியம் என்பது தவறான தத்துவங்களிலிருந்து சரியான முடிவுகளைப் பெறுவது:இரண்டுக்குமுள்ள வேற்றுமை இதுதான். அ லாக் மகா ஞானியின் மூளையிலும் ஒரு மூலையில் மடமை தங்கியிருக்கும். க. அரிஸ்டாட்டில் மூடன் இறுதியில் செய்வதை அறிவாளி முதலில் செய்கிறான். அ ஸ்பானியப் பழமொரி ஆறு விஷயங்களைக்கொண்டு அறிவிலியைக் கண்டு கொள்ளலாம்; காரணமில்லாத கோபம் பயனில்லாத பேச்சு: முன்னேற்றமில்லாத மாறுதல்; பொருத்தமில்லாததைப்பற்றி ஆராய்தல்: அந்நியனை நம்புதல்; பகைவரை நண்பராகக் கருதுதல். அ அரபுப் பழமொழி மதிப்பீடு உண்மையாக மதிப்பிடுவதில் புகழ்வதோ, இகழ்வதோ குறிக்கோ ளன்று. ஆராய்ந்து பாகுபடுத்தி, உறுதியாக நிலைநாட்டி. அறிவோடு எடுத்துக்காட்டி, கண்ணியமான முறையில் தகுதியைக் கூறுவதே மதிப்பிடுதலுக்குரிய கடமைகள். அ எலிம்ஸன் அரிஸ்டாட்டில் முதலில் அமைத்த மதிப்பிடும் முறை. சரியான முறையில் மதிப்பீடு செய்வதற்காக அமைத்த அளவுகோலாகும். அ. ஜான்ஸன்